அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

29 March 2014

வட்டி இல்லா கடன் -29/03/2014‏‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக இன்று 29/03/2014 வட்டி இல்லா கடனாக ரூபாய் 10,000/- ஒரு சகோதரருக்கு வழங்கப்பட்டது


22 March 2014

தெருமுனை பிரச்சாரம் 22.03.2014

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 22.03.2014 மஃரிபுக்கு பின் மெகா போன் தெருமுனை பிரச்சாரம் ரஹ்மானியா தெருவில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் S.அப்துல் காதர் அவர்கள் வட்டியால் ஏற்படும் தீங்குகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

18 March 2014

கல்வி உதவி -18/03/2014

கூத்தாநல்லூர் கிளை சார்பாக இன்று 18/03/2014 கல்வி உதவி தொகையாக ரூபாய் 2000/- ஒரு சகோதரருக்கு வழங்கப்பட்டது


குறிப்பு : சகோதரர்களே, இந்த கல்வி உதவியை நாம் எல்லோருக்கும் தெரிவிப்பது, இதுவரை நமக்கு பொருளாதார உதவி செய்தவர்கள் தாம் கொடுத்த பொருளாதாரம் சரியான முறையில் சென்றடைகின்றது என்று என்னுவதற்காகவும், வரும் கல்வி ஆண்டில் அதிக அதிக மனுக்கள் நம் ஜமாஅத்துக்கு கொடுப்பார்கள், அதற்காக இதை பார்க்கும் சகோதரர்கள் தாமும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க எண்ணம் வரவேண்டும் என்ற தூன்டுதல்களுக்காகவுமே இதை நாம் வெளியில் தெரிவிக்கிறோமே தவிர வீன் விளம்பரம் இல்லை என்பதை தெரிவித்துகொள்கிறோம், சகோதரர்கள் இதை புரந்துகொள்ளவும், வரும் ஆண்டில் கல்வி உதவி செய்வதாக இருந்தால் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்.

கல்வி உதவி என்று பொருளாதாரம் வந்தால் கல்வி உதவிக்காக மட்டுமே உபயோகம் செய்யப்படும்.

17 March 2014

அமைச்சரும்,வேட்பாளரும் ஆதரவு கேட்டு மர்கஸ் வருகை - திருக்குர்ஆன் அன்பளிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று 17.04.2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர கிளைக்கு அதிமுக வின் உணவு துறை அமைச்சரும் தொகுதி வேட்பாளரும் ஆதரவு கேட்டு மர்கஸிர்க்கு காலையில் வந்தனர் இதில்

* இருவருக்கும் திருக்குர்ஆன் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது

* முன்னதாகவே நாங்கள் பொன்னாடை ஏற்றுகொள்ளமாட்டோம் அதேபோல் அதை யாருக்கும் அணிவிக்கவும் மாட்டோம் என்று தெளிவாக சொல்லிவிட்டதால் பொன்னாடை போடவுமில்லை வாங்கவுமில்லை.

*எங்களுடைய ஜமாஅத் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக தான் ஆதரவு கொடுத்திருக்கிறோம்,நாங்கள் தீவிரமாக களப்பனியாற்றுவோம்,எங்களுடைய கோரிக்கையான இடஒதுக்கீட்டை உயர்த்த உங்கள் சார்பாக மேலிடத்திற்கு தெரிவியுங்கள் என்று அமைச்சரிடமும் தொகுதி வேட்பாளரிடமும் தெரிவிக்கப்பட்டது.

*நாங்கள் தனியாக தான் பிரச்சாரம் செய்வோம் என்று எடுத்துசொல்லப்பட்டது

* அனைவரும் தரையில் உட்கார வைத்து தான் பேசப்பட்டது,யாரையும்வரவேற்க வாசல் வரை செல்லவில்லைை - ஆஹா ஒஹோ என்று புகழுதலும் இல்லை, அல்ஹம்துலில்லாஹ்.

ஜஷாக்கல்லாஹீ கைரன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை




16 March 2014

பேச்சாளர் பயிற்சி முகாம் - 16.03.14

கூத்தாநல்லூர் கிளை மர்கஸில் திருவாரூர் மாவட்டம் சார்பாக 16.03.2014 அன்று பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது,சுற்று வட்டார கிளைகளிலுருந்து மொத்தம் 10 சகோதர்ர்கள் கலந்து கொன்டனர்.


மெகா போன் தெருமுனை பிரச்சாரம் - 16.03.14

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 16.03.2014 மஃரிபுக்கு பின் மெகா போன் தெருமுனை பிரச்சாரம் ஷவ்கத் அலி தெரு  கரும்புகொல்லையில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் S.அப்துல் காதர் அவர்கள் இனைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.


15 March 2014

தெருமுனை பிரச்சாரம் 15-03-2014

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 15.03.2014 மஃரிபுக்கு பின் மெகா போன் தெருமுனை பிரச்சாரம் மஸ்ஜிதிய்யா தெருவில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் S.அப்துல் காதர் அவர்கள் இனைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


கிளை ஆலோசனை கூட்டம் 13.03.2014

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 13.03.2014 அன்று மஃரிபுக்கு பின் கிளை ஆலோசனை கூட்டம் பொதுக்கூட்டம் நடத்துவது சம்மந்தமாக தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.

11 March 2014

கல்வி உதவி -11/03/2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக இன்று 11/03/2014 கல்வி உதவி தொகையாக ரூபாய் 3500/- ஒரு சகோதரிக்கு வழங்கப்பட்டது

09 March 2014

தெருமுனை பிரச்சாரம் - 09/03/2014

கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக ஜாவியா தெருவில் மெகா போன் தெருமுனை பிரச்சாரம் இன்று 09/03/2014 மஃரிபுக்கு பின் நடைபெற்றது, இந்த பிரச்சாரத்தில் சகோ. அப்துல் காதர் உரையாற்றினார்கள்.



08 March 2014

தெருமுனை மெகா போன் பிரச்சாரம் - 08/03/2014

கூத்தாநல்லூர் கிளை சார்பாக இன்று 08-03-2014 மஃரிபுக்கு பின் 2 இடத்தில் தெருமுனை மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது, முதலாவதாக நேருஜி ரோட்டில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அமீரக திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் சகோ. திப்புரஹீம் பேசினார் இரண்டாவதாக காந்தி நகரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சகோ. அப்துல் காதர் பேசினார்.அல்ஹம்துலில்லாஹ்


07 March 2014

தெருமுனைபிரச்சாரம் 07-03-2014

இன்று 07-03-2014 மஃரிபுக்கு பின் 2 இடத்தில் தெருமுனை மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது, முதலாவதாக மேலதெரு-சின்னப்பள்ளி தெரு சந்திப்பில் சகோ. அப்துல் காதர் இனைவைப்பு என்ற தலைப்பில் பேசினார் இரண்டாவதாக பெரியதெரு பொன்னாச்சி கேப்ஸ் அருகில் கிளை தலைவர் நெய்னா முஹம்மது இனைவைப்பு என்ற தலைப்பில் பேசினார்.அல்ஹம்துலில்லாஹ்



06 March 2014

தெருமுனை பிரச்சாரம் - 06/03/2014

கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக ரஹ்மானியா தெருவில் மெகா போன் தெருமுனை பிரச்சாரம் இன்று 06/03/2014 மஃரிபுக்கு பின் நடைபெற்றது, இந்த பிரச்சாரத்தில் கிளை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது கல்வி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.




05 March 2014

தெருமுனை பிரச்சாரம் 05-03-2014

தெருமுனை பிரச்சாரம் மெகா போன் மூலம் இன்று மஃரிபுக்கு பின் கூத்தாநல்லூர் மரியம் நகரில் நடைபெற்றது,வட்டியின் தீமையை பற்றி நமது மர்கஸின் இமாம் சகோ.அப்துல் காதர் தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.



04 March 2014

கிளை ஆலோசனை கூட்டம்‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக இன்று 04.03.14 மஃரிபுக்கு பின் கிளை ஆலோசனை கூட்டம் பொதுக்கூட்டம் நடத்துவது சம்மந்தமாக பேசப்பட்டது.

குர்ஆன் அன்பளிப்பு‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 27-02-2014 அன்று கும்பகோனத்திலிருந்து வந்திருந்த AHUJA sound system கடை முதலாளிக்கு குர்ஆன் மற்றும் 4 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

மாற்று மத புத்தக ஸ்டால்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 03-03-2014 அன்று கூத்தாநல்லூர் காவல்நிலையம் எதிரில் மாற்றுமத புத்தக ஸ்டால் நடைபெற்றது.இதில் மாற்று மத சகோதரர்கள் 15க்கும் மேற்பட்டோர் சுமார் 35 புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.