அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

24 February 2013

ஹைதரபாத் குண்டு வெடிப்பு பின்னணியில் யார்? விவாதம் TNTJ vs HF

நிகழ்ச்சி நடந்த நாள் - 23/02/2013

கேப்டன் சேனலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் இந்து முன்னனிக்கும் நடந்த விவாத வீடியோ

தகவல் http://www.facebook.com/ThouheedJamath

ஹைதராபாத் குண்டு வெடிப்பு – கேப்டன் டிவி விவாதம் by abdulnaseerkw

21 February 2013

சுன்னத்வல் ஜமாத்தினரின் பயானுக்கு குர்ஆன் ஹதீஸ் படி மறுப்பு

அல்லாஹ்வின் திருப்பெயரால்,

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

அன்புள்ள சகோதர்களுக்கு நமதூர் ஜாவிய்யா தெருவில் முஹையத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் சுன்னத்வல் ஜமாஅத் கொள்கை விளக்கம் என்று சொல்லிக்கொன்டு இஸ்லாத்துக்கு முரணான பல கட்டுக்கதைகளை பயான் என்ற பெயரில் சொல்லி மக்களை வழி கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களது பயானுக்கு குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் தகுந்த விளக்கம் அளிக்க நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளையின் சார்பாக நமது பள்ளியின் இமாம் சகோதரர் எஸ். அப்துல் காதர், அவர்கள் விளக்கம் அளிக்க இருக்கிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் இன்று 21-02-2013 முதல் லோக்கல் சேனலில் தொடங்கப்படஇருக்கிறது மதியம் 2 முதல் 3 மணி வரை மற்றும் இதே நிகழ்ச்சி மீண்டும் இரவு 8 மணி முதல் 9 மணிவரை தொடர்ச்சியாக சில தின்ங்களுக்கு நடைபெறும்

சகோதரர்கள் தங்கள் குடும்பத்தினர், நன்பர்கள் அனைவருக்கும் இந்த தகவலை தெரியப்படுத்தி பார்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கூத்தாநல்லூர் நகரம்.

திருவாரூர் மாவட்டம்.

18 February 2013

அப்சல்குரு விற்கு தூக்கு சரியா ? உரை-சகோ. பி.ஜே.

கடந்த 17/02/2013 அன்று அப்சல் தூக்கு சரியா என்ற தலைப்பில் சென்னை மன்னடியில்  நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் சகோ. பி.ஜே. உரையாற்றினார்.அதன் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Thanks to Brother Jahir Hussain



அப்சல்குரு விற்கு தூக்கு சரியா ? from jahir on Vimeo.

பேச்சு பயிற்சி முகாம் - 17.02.2013

நமது தவ்ஹீத் மர்கஸில் 17/02/2013 ஞாயிற்று கிழமை காலை 11.00  மணியளவில் மார்க்கம் சம்பந்தமாக மேடை பேச்சு பயிற்சி சகோ. ரபீக் அவர்கள் வகுப்பு எடுத்து எளிதாக புரியும்படி உரை நிகழ்த்தினார் இதில் மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ள சகோதரர்கள் கலந்து  கொண்டு பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.





17 February 2013

இஸ்லாமிய சட்டமே தீர்வு - கோவை ரஹ்ம்மத்துல்லா

கடந்த 16/02/2013 அன்று லால்பேட்டையில் நடந்த இஸ்லாமிய சட்டமே தீர்வு என்ற தலைப்பில் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் அதன் வீடியோவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி -  ABDUL NASEER KW

இஸ்லாமிய சட்டமே தீர்வு – பாகம் 1 by abdulnaseerkw



இஸ்லாமிய சட்டமே தீர்வு – பாகம் 2 by abdulnaseerkw


16 February 2013

விடைபெற்ற வினோதினி கேட்டது என்ன?


இஸ்லாமிய சட்டம் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பதனை காரைக்கால் சகோதரியின் அகால மரணம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 


பாதிக்கப்பட்டவனுக்கு தான் வலி தெரியும். இதனால் தான் மனிதனிக்கேற்ற மார்க்கமான இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் இடத்தில் நின்று பார்க்க சொல்கிறது. 

பாதிக்கப்பட்ட சகோதரி வினோதினியின் தந்தை பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த பேட்டி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கூடாது அப்படி வழங்கினால் அவன் ஒரே நிமிடத்தில் செத்துடுவான், எனது மகள் எப்படி வேதனைப்பட்டாளோ அதே போல் வேதனைப்பட்டு அவன் சாக வேண்டும் என அவர் வேதனையுடன் குறிப்பிட்டது பலருக்கும் சிந்தனையை தூண்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

சமீபத்திய டெல்லி கற்பழிப்பில் மரணமடைந்த மாணவியின் தந்தையும் அனைத்து குற்றவாளிகளுக்கும் மைனட் மேஜர் என்று பார்க்காமல் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டதும் குறிப்பிடத்தக்கது. இதே போன்று தான் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சொல்வார்.

அதே நேரம் பாதிக்கப்பட்டவர் மன்னிப்பார் எனில் குற்றவாளி எவ்வித தண்டனையும் இல்லாமல் விடுதலையை வழங்கவும் இஸ்லாம் சொல்கிறது. 

இத்தகைய உன்னதமான சட்டத்தை இஸ்லாத்தை தவிர வேறு எந்த சித்தாந்தமோ, நாடோ வழங்கவில்லை என்பது தான் சிறப்பு. இச்சிறப்புக்கு காரணம் இச்சட்டத்தை வழங்கியது இவ்வுலகை படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஆகும்.

அதை விவரிக்கும் வீடியோவை பாருங்கள்.



மாற்றுமத தாவா -16-02-2013

நாள் - 16.02.2013

கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்தில் காளிதாஸ் என்ற மாற்றுமத சகோதர மாணவர்க்கு நீண்ட காலமாக குரஆன் வாங்கிப் படிக்க ஆவலோடு இருந்ததாக கூறினார் இலவச குரஆன் நமது கிளை சார்பாக வழுங்குவதாக கேள்விப்பட்டு வந்த்தாக கூறினார் அவருக்கு குர்ஆன் தமிழாக்கம் வழங்கி இஸ்லாம் சம்பந்தமான எந்த நூல் வேண்டும்  என்றாலும் அல்லது எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களை அனுகவும் என்று சொல்லி அவருக்கு தாவா செய்து அனுப்பி வைத்தோம்.புகழ் அனைத்து அல்லாவிற்க்கே…..


ஜீம்ஆ நோட்டீஸ் வினியோகம்

நாள் 15/02/2013

நாளைய சிந்தனை  என்ற தலைப்பின் கீழ்   இந்நோட்டிஸ் நமது மர்கஸ் ஜீம்மாவில் வினியோகம் செய்யப்பட்டது.



15 February 2013

அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை சரியா-பொதுக்கூட்டம்

நேரடி ஒளிபரப்பு

”அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை சரியா” ஞாயிற்றுகிழமை (17-2-2013) மண்ணடி பொதுக் கூட்டம் நமது www.onlinepj.com இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் 

உரை - சகோ. பி.ஜே.
நேரம்- மாலை 6.30

இன்ஷா அல்லாஹ்!


13 February 2013

கற்பை சூறையாடும் காதலர் தின நோட்டீஸ் வெளியீடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் -திருவாரூர் மாவட்டம் அச்சிட்டு வெளியிட்ட   பிப்ரவரி -14 –பெண்கள் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினம் என்ற விழிப்புணர்வு நோட்டீஸை கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் கிளை மூலம் பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.




11 February 2013

அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு-உணர்வு வார இதழ்

பாராளுமன்றத்தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்து பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பி.நவ்லேகர் என்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் கடந்த 04/08/2005 அன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அபசல் குரு கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டார். அப்சல் குருவோடு சேர்த்து இந்த நாட்டின் நீதி பரிபாலனமும் தூக்கிலிடப்பட்டுள்ளது.

இந்தத்தீர்ப்பின் மூலம் நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கின்றதா? இந்திய அரசியலமைப்புச் சாசனச் சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றனவா? என்ற சந்தேகம் நம்முடைய உள்ளத்தில் எழுந்துள்ளது.

பாபர் மசூதி விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி:
இதற்கு முன்பாக பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் பள்ளிவாசலை இடித்த பயங்கரவாதிகளுக்கு இரண்டு பங்கும், பள்ளிவாசலை இழந்த முஸ்லிம்களுக்கு ஒரு பங்கும் வழங்கி அற்புதமான(?) கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை வழங்கி நீதியை நிலைநாட்டினார்கள்(?) நமது நீதிபதிகள்.
அதுபோலத்தான் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனை குறித்த தீர்ப்பும் அமைந்துள்ளது.

இதோ தீர்ப்பின் வாசகங்கள்:

அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாத குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. ‘பெரும்பாலான சதித்திட்டங்களில், குற்றச் சதியில் பங்கேற்றதற்கான நேரடி சாட்சியம் இருக்க முடியாது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட அப்சல் கொல்லப்பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகளுடன் ஒத்துழைத்தார் என்பது சூழ்நிலைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது தெளிவாகிறது’.

“குற்றம் மிக பெரியது, கொடியது என்பதால் முழு நாடுமே இதனால் அதிர்ந்துள்ளது என்பதால் “collective conscience of the society” – ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியை அப்சல் குருவிற்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால்தான் திருப்திப்படுத்த முடியும். அந்த உச்ச கட்ட தண்டனை மரணதண்டனையாக இருக்க வேண்டும்” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

ஒருவருக்கு மரணதண்டனை வழங்குவதாக இருந்தால் அவர் அந்தக் குற்றத்தைச் செய்ததை கண்ணால் கண்ட சாட்சியம் இருந்தாக வேண்டும் என்பதுதான் மரணதண்டனை வழங்கப்படுவதற்கான நமது இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் முக்கிய விதிகளில் ஒரு விதியாகும்.

நமது அரசியல் சாசனச் சட்டம் மரணதண்டனை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை மேற்கண்டவாறு தெளிவாக கூறியுள்ள நிலையில், அப்சல் குரு என்பவர் பாராளுமன்றத்தாக்குதலை நடத்தினார் என்பதற்கு எவ்வித (கண்ணால் கண்ட சாட்சிகள்) ஐவிட்னஸும் இல்லாத நிலையில் அவருக்கு மரணதண்டனை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்திருப்பது நம் நாட்டின் நீதிபரிபாலனத்தையே கேலிக்குள்ளாக ஆக்கியுள்ளது.
அத்தோடு மட்டுமல்லாமல் மரணதண்டனை வழங்குவதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய காரணம் எள்ளி நகையாடக்கூடிய வகையிலும், நீதிமன்றத் தீர்ப்பைக் காரி உமிழக்கூடிய தரத்திலும் உள்ளது.
மக்களின் கூட்டு மனசாட்சி (“collective conscience of the society”) அப்சல் குருவை தூக்கிலிட வேண்டும் என்று விரும்புவதால்தான் இவருக்கு தூக்கு தண்டனை என்று இவர்கள் தீர்ப்பெழுதுவார்களேயானால், மக்களின் கூட்டு மனசாட்சியை அப்போதுதான் திருப்திப்படுத்த முடியும் என்று இவர்கள் கூறுவார்களேயானால் இவர்களிடத்தில் சில கேள்விகளை நாம் கேட்க விரும்புகின்றோம்:

மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்துவதுதான் நோக்கம் என்றால் ஒருவருக்கு மரணதண்டனை வழங்க எந்த சாட்சிகளும் தேவையில்லையா?

ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டுமா?
இல்லையா? என்பதை மக்களின் கூட்டு மனசாட்சிதான் முடிவெடுக்கும் என்றால் பிறகெதற்கு நீதிமன்றங்கள்?

பிறகு எதற்கு காவல் நிலையங்கள்?

பிறகெதற்கு அரசியல் சாசனச் சட்டம்?

அனைத்தையும் கலைத்துவிட்டு மக்களின் கூட்டு மனசாட்சியையே உச்சநீதிமன்ற உயர் பெஞ்ச் என்று அறிவித்துவிட்டுப் போக வேண்டியதுதானே!

குஜராத்தில் 2000 முஸ்லிம்களைக் கொன்று குவித்து நரவேட்டையாடிய மோடியைத் தூக்கில் தொங்கவிடவேண்டும். அதுதான் சரியான தீர்வாக அமையும் என்று இந்திய முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், உலகத்திலுள்ள அனைத்து முஸ்லிம்கள் உட்பட நடுநிலையான இந்துப் பெருமக்கள் முதற்கொண்டு அமெரிக்காவிலுள்ள ஆட்சியாளர்கள் வரை அனைவரது கூட்டு மனசாட்சியும் தீர்ப்பளிக்கின்றது.
இதைக் காரணம் காட்டி மோடிக்கும் சங்பரிவாரக்கும்பல்களுக்கும் மக்களின் கூட்டு மனசாட்சி அடிப்படையில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவரும் இல்லை – உச்சநீதிமன்றம்:

எந்தவொரு பயங்கரவாத குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று தெளிவாக தங்களது தீர்ப்பில் கூறியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அனுமானத்தின் அடிப்படையிலும், யூகத்தின் அடிப்படையிலுமானதுதான் என்பதை கீழ்க்கண்ட தங்களது தீர்ப்பு வரிகளில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
‘பெரும்பாலான சதித்திட்டங்களில், குற்றச் சதியில் பங்கேற்றதற்கான நேரடி சாட்சியம் இருக்க முடியாது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட அப்சல் கொல்லப்பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகளுடன் ஒத்துழைத்தார் என்பது சூழ்நிலைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது தெளிவாகிறது’

இவர் குற்றம் செய்தார் என்பதற்கு நேரடியான சாட்சிகள் இல்லை என்பதுதான் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு. மேலும் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு ஒத்துழைத்தார் என்பதும் கூட சாட்சியங்களின் மூலமாக தெரிய வருகின்றது என்று நீதிபதிகள் கூறவில்லை. மாறாக சூழ்நிலைகளை சீர்தூக்கிப் பார்க்கும்ப்போது தெரிய வருகின்றது என்று கூறி தங்களது தீர்ப்பின் லட்சணத்தை தாங்களே தெளிவுபடுத்தியுள்ளனர்.

8ஆண்டுகள் தூக்குக்கு காத்திருந்தவரை தூக்கிலிட தடைசெய்த உச்சநீதிமன்றம்:

பஞ்சாப் முதலமைச்சராக இருந்த பிரதாப் சிங் கெய்ரோன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தயா சிங் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதைவிட ஒரு பயங்கரவாத செயல் வேறொன்றும் இருக்க முடியாது. ஆனால் இந்த பயங்கரவாதிக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது உச்சநீதிமன்றம்.

இந்த வழக்கில் மரணதண்டனை விதித்த பிறகு ஒருவர் நீண்ட காலம் தண்டனை வழங்கப்படாமலே தண்டனையை சந்திக்கப் போகிறோம் என்ற மனநிலையில் 13 ஆண்டுகாலம் சிறையில் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கிறார். எனவே நாங்கள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அதற்கு குறைவான தண்டனையான ஆயுள் தண்டனையாக குறைக்கின்றோம் என்று தீர்ப்பு சொன்னார்கள் உச்சநீதி மன்ற நீதிபதிகள்.

இதற்கு முன்பாக எத்தனையோ படுபாதக கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட எத்தனையோ நபர்களை மன்னித்து அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குமேல் மரணதண்டனையை எதிர்நோக்கி இருந்துள்ளார்கள் என்று காரணம் கூறி, அந்தக்காரணத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை நாங்கள் ரத்து செய்கின்றோம் என்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அப்சல் குரு முஸ்லிம் என்பதால் மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதாக தீர்ப்பெழுதியிருப்பது விநோதத்திலும் விநோதம்தான்.
இவர்கள் விரும்பினால் தூக்குதண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி 8ஆண்டுகாலம் தூக்குதண்டனையை எதிர்நோக்கி வெந்துகொண்டிருந்துள்ளார். அதனால் தூக்கு தண்டனையை ரத்து செய்கின்றோம் என்று சொல்வார்கள்.
இவர்களுக்கு பிடிக்காவிட்டால், தூக்குதண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி 8ஆண்டுகாலமாகியும் தூக்கில் போடாமல் வைத்துள்ளீர்கள். என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்?. உடனே அவனை தூக்கில் போடுங்கள் என்று சொல்வார்கள் என்றால் இதுவெல்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் திட்டம் தீட்டி எழுதப்பட்ட தீர்ப்புகளாகத்தான் நாம் கருத வேண்டியுள்ளது.
அப்சல் குருவுக்கு தண்டனை கொடுத்ததிலும் விநோதம்:
அதுமட்டுமல்லாமல் பாராளுமன்றத்தாக்குதல் வழக்கில் அப்சல் குரு கைது செய்யப்பட்டதான் பின்னணி விநோதத்திலும் விநோதமான ஒன்று. பாராளுமன்றத்தைத் தாக்கியவர்களை சுட்டுக்கொன்ற போது இறந்து கிடந்தவர்கள் தொலைபேசியில் அவர்கள் தங்களது தொலைபேசி வாயிலாக அப்சல் குருவை தொடர்பு கொண்டிருந்தார்களாம். இதுதான் அப்சல் குரு குற்றவாளி என்பதற்கான ஆதாரமாம்.
இதில் பிரதான குற்றவாளியாக கைது செய்யப்பட்ட கிலானி என்ற பேராசிரியர் உட்பட மூன்று நபர்களில் இருவர் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். ஒருவருக்குமட்டும் 10ஆண்டு சிறைத்தண்டனை வழங்கிய உச்ச நீதிமன்றம், பாராளுமன்றத்தாக்குதலில் அப்சல் குரு நேரடியாக ஈடுபட்டார் என்றும் குற்றம் சாட்டவில்லை. இப்படி நேரடியாக குற்றம் சாட்டப்படாத நிலையிலும், அதற்கான நேரடி சாட்சிகள் இல்லாத நிலையிலும் இந்த வழக்கில் யாருக்காவது தூக்குதண்டனை வழங்க வேண்டும் என்று இவர்களாக முடிவெடுத்து அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்து மக்களின் கூட்டு மனசாட்சியின் மீது பழியைப்போட்டுள்ளார்கள்.
அரசியல் சாசனத்திற்கு முரணாக தங்களது மனோஇச்சைப்பிரகாரம் அப்சல் குருவுக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்து இந்திய அரசின் இறையாண்மையையும், நீதி பரிபாலனத்தையும் இந்த நீதிபதிகள் தூக்கிலிட்டுள்ளார்கள் என்பதுதான் இதிலிருந்து நாம் அறிந்து கொண்ட உண்மை.

நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். அல்குர் ஆன் 4 : 135
http://www.onlinepj.com/unarvuweekly/afzal-guru-thooku/
(முகநூல் தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து காப்பி செய்யப்பட்டது)

08/02/2013 அன்று வெளியிடப்பட்ட ஜீம்ஆ நோட்டீஸ்

“பாவாமன்னிப்பு எனும் மகத்தான  கூலி”   என்ற தலைப்பின் கீழ்  இந்நோட்டிஸ் ஜீம்ஆ தொழுகைக்கு பின் நமது மர்கஸில் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.



10 February 2013

08/02/2013 அன்று பள்ளி கட்டுமான பணிக்கான உதவி

கடந்த வெள்ளி கிழமை 08/02/2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோயமுத்தூர் கிளைக்கு புதிய பள்ளி கட்டுவதற்காக கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ் சார்பாக ரூ1,150/ வசூல் செய்து கொடுக்கப்பட்டது இன்ஷாஅல்லாஹ் சகோதரர்கள் புதிய பள்ளிக்கு நன்கொடை கொடுக்கும் பட்சத்தில் அதனையும் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது


09 February 2013

டிஎன்டிஜே வின் வெப்டிவி ஆரம்பம்...மார்ச் 1 முதல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் புதிய இனையதள டிவி ஆரம்பம் இன்ஷா அல்லாஹ் 01/03/ 2013 முதல் www.tntj.tv
தகவல் : முகநூல் தவ்ஹீத் ஜமாத்

01 February 2013

01.02.13 அன்று KNR TNTJ மூலம் வெளியிடப்பட்ட நோட்டீஸ்


இறுதி தூதரின் ஹஜ் பேருரை என்ற தலைப்பின் கீழ் இந்நோட்டிஸ் 01/02/2013 அன்று ஜூம்ஆவில் வினியோகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.


விஸ்வரூபத்தை எதிர்க்கும் முஸ்லிம் அமைப்புகள் சிறு குழுக்கள் அல்ல-முதல்வர் பேட்டி (வீடியோ)

விஸ்வரூபத்தை எதிர்க்கும் முஸ்லிம் அமைப்புகள் சிறு குழுக்கள் அல்ல தவ்ஹீத் ஜமாஅத் 7.5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட மாபெரும் அமைப்பு - தமிழக முதல்வர் ஜெயலலிதா.

யா அல்லாஹ் எங்களுக்கு தலைக்கனத்தை தந்துவிடாதே! மன்னிப்புடன் உன்னிடமே மண்டியிடுகிறோம்!

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! 

நன்றி : முகநூல் தவ்ஹீத் ஜமாத்


31/01/13 அன்று விஸ்வரூபம் பிரச்சினை குறித்து TNTJ மாநில தலைவர் விளக்கம்:


சகோ.பஷீர் தொடர்பு கொண்டது உண்மை. அவரை நாம் பிரதிநிதியாக அனுப்பவில்லை. 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்தே எந்த முடிவானாலும் எடுக்க வேண்டும். 
பிரச்சினையை சுமூகமாக தீர்க்கும் வாசல் திறக்கப்பட்டால் வீம்பு பிடிக்காமல் சுமூகமாக தீர்ப்பதே நல்லது.

23 அமைப்புகளையும் கலந்தாலோசிக்காமல் காட்சி நீக்கம் கூடாது. 23 அமைப்புகள் இவ்விஷயத்தில் ஏற்றுக்கொள்ளும் காட்சி நீக்கங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக்கொள்ளும்.

இவ்விஷயத்தில் பெயர் முக்கியமல்ல, இந்து முஸ்லிம் நல்லிணக்க குலைவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதே நமது நோக்கம்.


நன்றி : முகநூல் தவ்ஹீத் ஜமாத்



Katchigalai-Neeki-Visvarupathai-Velidalama-TNTJ... by ArshathRahman