அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

14 November 2015

பெண்கள் பயான்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 08.11.2015 அன்று இஸ்மாயில் தெருவில் ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்



தெருமுனை பிரச்சாரம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 07.11.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் ஜின்னா தெருவில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்.



06 November 2015

தெருமுனை கூட்டம் 31.10.2015

அஸ்ஸலாமு அலைக்கும்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 31.10.2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமான விழிப்புனர்வு தெருமுனை கூட்டம் ரஹ்மானியா தெருவில் நடந்தது.அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் பேரருளால்  முதல் முறையாக ஊர் உள்ளே ஸ்டேஜ் அமைத்து மினி பொதுக்கூட்டம் போல இந்த தெருமுனை கூட்டம் நடந்தது, இதில் மாவட்ட பேச்சாளர் சகோ. மரக்கடை அப்துல் மாலிக் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள். இறுதியாக மர்கஸ் இமாம் மற்றும் மாவட்ட பேச்சாளர் சகோ. அப்துல் காதர் அவர்கள் இனைவைப்பும் அதனால் ஏற்படும் விபரீதங்களும் என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.
பேச்சின் நடுவே கடும் மழை பெய்தது மழையை பொருட்படுத்தாமல் உரையாற்ற மக்கள் அக்கம்பக்க வீடுகளின் போர்டிகோவில் இருந்து உரையை கேட்டனர். மழை விடாததால் இறுதிநேரத்தில் பயான் நிறுத்தப்பட்டது.