அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

17 May 2015

மருத்துவ முகாமில் திருக்குர்ஆன் அன்பளிப்பு - 17.05.2015‏

கூத்தாநல்லூர் நகர கிளை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இனைந்து 17.05.2015 ஞாயிறு அன்று  இலவசமாக மாபெரும் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது, இந்த முகாமில் கலந்துகொண்ட டாக்டர்கள், உதவியாளர்கள், நர்ஸ் மற்றும் கலந்துகொண்ட மாற்று மத சகோதரர்களுக்குதிருக்குர்ஆன் தமிழாக்கம் 40 மற்றும் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் ? என்ற புத்தகம் 40 இலவசமாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.









மருத்துவ முகாம் - 17.05.2015‏

கூத்தாநல்லூர் நகர கிளை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இனைந்து 17.05.2015 ஞாயிறு அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை இலவசமாக மாபெரும் சிறப்பு மருத்துவமுகாம் தவ்ஹீத் மர்கஸில் அல்லாஹ்வின் பேருதவியால் சிறப்பாக நடந்து முடிந்தது. , சர்க்கரை, இரத்த அழுத்தம், இ.சி.ஜி, எக்கோ, எலும்பு அடர்த்தி போன்ற  பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டு  இதில் இருதயம் , மூட்டு மற்றும் எலும்பு சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்கள், 140 க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.






12 May 2015

வட்டி இல்லா கடன்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 11.05.2015 அன்று ஒரு சகோதரருக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தின் மூலம் ரூபாய் 10,000/- கொடுக்கப்பட்டது.



08 May 2015

கோடைகால பயிற்சி முகாம்‏

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக 02.05.2015 முதல் 11.05.2015 வரை கோடைக்கால பயிற்சி முகாம் கிளை மர்கஸில் நடைபெற்று வருகிறது, இதில் 78 மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்கின்றனர்.அல்ஹம்துலில்லாஹ்


மாபெரும் மருத்துவ சிறப்பு முகாம் - கூத்தாநல்லூரில்‏


06 May 2015

புத்தக அன்பளிப்பு

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 05.05.15 அன்று மாற்று மத சகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


பெண்கள் பயான் 04.05.2015

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 04.05.15 அன்று அக்கரை புது தெருவில் உள்ள ஒரு கொள்கை சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்.


புத்தக அன்பளிப்பு

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 03.05.15 அன்று மாற்று மத சகோதரருக்கு சகோதரர் அல்தாபி எழுதிய முஸ்லீம்கள் தீவிரவாதிகள் ? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


01 May 2015

மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 01.05.2015 அன்று இளங்கோ என்ற மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.