அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

30 May 2016

பெண்கள் பயான் 28.05.2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 28.05.2016 சனிக்கிழமை அன்று சகோதரர் ஜபருல்லாஹ் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் 30க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர் மர்கஸ் இமாம் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் பெண்களுக்கு முன் மாதிரி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

கிளை பொதுக்குழு 2ம் ஆண்டு 29.05.2016

அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த 29.05.2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளையின் 2ம் ஆண்டு பொதுக்குழு தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது,
இந்த பொதுக்குழுவை திருவாரூர் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார்,
மர்கஸ் இமாம் S. அப்துல் காதர் சபை ஒழுங்குகள் பற்றி உரையாற்றினார்.
கிளை தலைவர் A. நெய்னா முஹம்மது தொகுத்து வழங்கினார்.
கிளை செயலாளர் A. முஹம்மது (அபுபஜ்லான்) ஆண்டறிக்கை வாசித்தார்.
கிளை துணை செயலாளர் V.M. முஹம்மது காசிம் 2015ம் ஆண்டு வரவு செலவு கணக்கை வாசித்தார், இதில் ஏதும் சந்தேகம் இருந்தால் நோண்பு முதல் நாள் வரை பொ1ருளாளரை சந்தித்து சந்தேகங்களை கேட்டு தெளிவுபெறலாம் என்று உறுப்பினர்களுக்கு நேரம் கொடுக்கப்பட்டது.
குறைகள் விமர்சனம் இருந்தால் வைப்பதற்கு அனுமதிக்கப்பட்டு கிளை தலைவர் உரிய முறையில் விளக்கம் அளித்தார்.
புதிய கிளையாக கிளை 3 என்று பிரிக்கப்பட்டு தலைவராக ; K.A. அப்துல் நசீர். செயலாளராக ; S.H.நூர் முஹம்மது  பொருளாளராக : திப்பு ரஹீம் துணை தலைவராக : V.M.S. சாகுல் ஹமீது துணை செயலாளராக : S.M.K. ஜஃப்ரான் நியமிக்கப்பட்டார்கள்.
கூத்தாநல்லூர் கிளை 3 க்கு ஜமாலியா தெரு, 2வது கமாலியா தெரு, இஸ்மாயில் தெரு, ஜாவியா தெரு மற்றும் ஹமீதியா தெரு ஆகிய 5 தெருக்கள் இந்த கிளையின் கீழ் வரும் என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது,
செயலாளர் நன்றியுரையுடன் பொதுக்குழு சிறப்பாக முடிந்த்து, புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை 1
   




23 May 2016

ரமளான் 2015 கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி

கூத்தாநல்லூர் கிளை சார்பாக ரமளான்  2015 கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டு 22.05.2016 அன்று ரஹ்மானியா தெருவில் தெருமுனை கூட்டத்தோடு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. முதல் பரிசாக DOUBLE DOOR FRIDGE இரண்டாவது பரிசாக WASHING MACHINE மூன்றாவது பரிசாக STEEL BEROL  மற்றும் 10 ஆறுதல் பரிசாக ரூபாய் 1000 கொடுக்கப்பட்டது எழுதியவர்கள் அனைவருக்கு அவ்ரகள் எடுத்த மதிப்பெண்க்கு ஏற்ப பொருட்கள் கொடுக்கப்பட்டன.


தெருமுனை கூட்டம் 22.05.2016

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 22.05.2016 அன்று தெருமுனைகூட்டம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி ரஹ்மானியா தெருவில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்புரையாக சகோ. சபீர் அலி அவர்கள் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள், கூத்தாநல்லூர் மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் மறுமை வெற்றி யாருக்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பராஅத் இரவாக இருந்ததால் பராஅத் இரவு பித்அத்தானது என்று சிறப்பாக பேசினார்கள், இந்த கூட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.



கோடைக்கால பயிற்சி முகாம் 02.05.2016 முதல் 12.05.2016 வரை

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கோடைக்கால பயிற்சி முகாம் 02.05.2016 முதல் 12.05.2016 வரை நடைபெற்றது, இதில் 98 மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.







மோர்பந்தல் 25.04.16 முதல் 15 நாட்கள் தொடர்ந்து

கூத்தாநல்லூர் கிளை சார்பாக தாகம் தீர்க்கும் மோர் பந்தல் மக்களுக்கு இலவசமாக தொடர்ந்து 15 நாட்கள் கொடுக்கப்பட்டன


மாற்று மத சகோதரருக்கு குர்ஆன் அன்பளிப்பு 25.04.2016


கூத்தாநல்லூர் கிளை சார்பாக மாற்று மத சகோதரருக்கு திருமறை குர்ஆன் தமிழாக்கம் மற்று மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது






நாகங்குடி தீ விபத்து 28.03.2016


கடந்த 28.03.2016 அன்று நாகங்குடியில் இரண்டு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு வீடு முற்றிலும் சேதப்பட்டது செய்தி கேள்விப்பட்டு கூத்தாநல்லூர் கிளை சார்பாக உடனே மக்களிடம் வசூல் செய்யப்பட்டு இரண்டு வீட்டிற்கு தேவையான உபயோகப்பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டன,, 









ஷிர்க் ஒழுிப்பு மாநாடு 31.01.2016

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 31.01.2016 அன்று 5 பஸ் 8 வேன் வாகனம் மூலம் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு செல்லப்பட்டது

ஷிர்க் ஒழிப்பு மாநாடு தெருமுனைகூட்டம் 23.01.2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளையின் தெருமுனைகூட்டம் 


நீன்ட நாட்களுக்கு பின் தாமதமான பதிவுக்கு வருந்துகிறோம்.