அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

30 November 2013
29 November 2013
அன்னாகாலனியில் தெருமுனை கூட்டம்
கூத்தாநல்லூர் கிளை சார்பாக கூத்தாநல்லூர் அன்னாகாலனியில் கடந்த 28/11/2013 அன்றுமஃரிபுக்கு பிறகு தெருமுனை கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் சிறப்புரையாக சகோதரர் அப்துல் ஹமீது மஹ்ளரி அவர்கள் மரணம் கற்றுத் தரும் பாடம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், கிளை துனை தலைவர்நெய்னா முஹம்மது ஜனவரி 28ல் நடைபெறும் போராட்டம் ஏன் என்ற தலைப்பில் உரையாற்றி அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சிறுது நேரம் உரையாற்றினார், 50 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இந்த கூட்டத்தில் ஆர்வமுடன் கேட்டனர், அல்ஹம்துலில்லாஹ்.
26 November 2013
மாற்று மத புக்ஸ்டால் - 26/11/2013
இன்று நமது கிளை சார்பாக மாற்று மத புக்ஸ்டால் காவல்நிலையம் எதிர்புறம் அஸருக்கு பிறகு அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக நடந்தது, மாற்று மத சகோதர,சகோதரிகள் ஆர்வமாக கலந்துகொண்டு இலவசமாக புத்தகத்தை வாங்கி சென்றனர்,49 புத்தகங்களும், நோட்டீஸ் 100க்கு மேல் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. பூதமங்களம் கிளையில் இருந்து மெகா போன் பெறப்பட்டு அதன் மூலம் மக்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
13 November 2013
மார்க்க கேள்வி பதில் சம்மந்தமான சில நினைவூட்டல்
முதலாவதாக இந்த கேள்வி பதில் போட்டியை நடத்தவேண்டும் என்று முனைப்பு காட்டிய நமது கிளை தலைவர் சகோதரர் K.A.அப்துல் நஸீர் அஹமது, பின்பு முழு ஒத்துழைப்பு கொடுத்த நமதுசகோ. R. நஸீர் அஹமது இந்த கேள்விகளை தயார் செய்த சகோ. பாஷித் பரீத் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல செயலாளர் சகோ. கூத்தாநல்லூர் ஜின்னா இந்த கேள்வித்தாள் தமது கடைகளிள் வைத்து எந்த பிரதிபலனும் பாராமல் விற்று கொடுத்த நமது சகோதரர்கள் பின்பு பதில்களை திருத்திய 10 சகோதரர்களுக்கும் அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக என்று பிரார்திப்போம்.
ரமலானில் நடந்த மார்க்க கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்ச - 10/11/2013
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் பேருதவியால் கூத்தாநல்லூர் கிளை சார்பாக பரிசளிப்பு நிகழ்ச்சி அழகான முறையில் நடந்தேறியது, நல்ல தலைப்பில் அருமையாக உரையாற்றினார் சகோதரர் அப்துல் ஹமீது மஹ்ளரி, வீடியோ எடுக்காமல் விட்டது தப்பாகிவிட்டது, அருமையான உரை, அல்ஹம்துலில்லாஹ்.
முக்கிய துளிகள்
* அனைவருக்கும் பரிசு
* இரண்டு புத்தகங்கள் அனைவருக்கும் - இஸ்லாமிய கொள்கை, கொள்கை விளக்கம் - சகோ. பிஜே எழதியது
*சுற்றுவட்டார கிளை நிர்வாகிகள் எல்லோரும் கலந்துகொன்டார்கள்
*ரஹ்மானியா தெருவில் இருக்கும் நமது மதரஸா ரய்யான் மற்று நமது மர்கஸில் இருக்கும் மதரஸா தவ்ஹீத் மாணவ மாணவியர்களுக்கும் பரிசு மற்றும் புத்தகங்கள்
*குறித்த நேரத்தில் ஆரம்பித்து குறித்த நேரத்தில் முடித்திருப்பது.
*100 சேர் பற்றாமல் இன்னும் சில சேர் வாடகைக்கு எடுத்தது மற்றும் நமது மர்கஸில் இருக்கும் பெஞ்சையும் உபயோகம் செய்தது.
*முதல் பரிசை சகோ. ஹசன் அலி அவர்களும் மாவட்ட தலைவர் H.பீர் முஹம்மது இருவரும் சேர்நது வழங்கினர்
*இரண்டாம் பரிசை சகோ. சாகுல் ஹமீது வழங்கினார்கள்
*மூன்றாம் பரிசை குவைத் கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சகோ. சித்தீக் வழங்கினார்.
*நமது கிளை சகோதரர்கள் மற்றும் சுற்றுவட்டார கிளை நிர்வாகிகள் அனைவரும் பரிசு வழங்கினார்கள்.
*கடைசியாக குறை என்பது இருக்கத்தான் செய்யும், இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை வரப்போகும் குறைகளை நிவர்த்திசெய்வோம், அடுத்த முறை புதிதாக தவறுசெய்வோம், நாமும் மனிதர்கள்தானே.
ஜஷாக்கல்லாஹூ கைரன்
06 November 2013
ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல தடை - கூத்தாநல்லூரில் போராட்டம் கைது - 05/11/2013
அல்லாஹ்வின் திருப்பெயரால்....,
அஸ்ஸலாமு அலைக்கும்
முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 2 வது அலுவலக கட்டுமான பணியை தடை செய்த திருவாரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 05/11/2013 அன்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது, அதை தொடரந்ந்து நமது கூத்தாநல்லூர் கிளை சாரபாக மக்களை திரட்டி போராட்டத்திற்கு செல்ல தயாராக இருந்தபோது லெட்சுமாங்குடியில் அதிகமான காவலர்கள் நாம் போராட்டத்திற்கு போவதை தடுப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாக நமது கிளை நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்ததும், உடனே மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை என்று கேட்டறிந்து இது நமக்கும் மட்டும் அல்ல அனைத்து ஊர்களிலும் காவல்துறை இந்த போராட்டத்திற்கு செல்ல விடாமல் தடுக்கின்றனர் என்று செய்தி நமக்கு கிடைத்தது, நமது சுற்றுவட்டார கிளைகளான மரக்கடை,பூதமங்களம்,தண்ணீர்குன்னம், பொதக்குடி, அத்திக்கடை மற்றும் மன்னார்குடியிலுந்து கொள்கை சகோதரர்கள் அனைவரும் வாகனத்தில் கூத்தாநல்லூர் மர்கஸில் குழுமினர், பின்பு அனைவரும் மர்கஸ் வளாகத்தில் மசூரா செய்துவிட்டு வரிசையாக அணிஅணியாக சென்று லெட்சுமாங்குடி மெயின் ரோட்டில் கைதானார்கள், பின்பு அவர்களை நாகூரார் திருமன மண்டபத்தில் வைக்கப்பட்டு மதியம் 3.30மணிக்கு விடுவிக்கப்பட்டனர், ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்துகொண்டார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

Subscribe to:
Posts (Atom)