தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 02/11/2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 05/11/13 அன்று திருவாரூரில் நடக்கும் கண்டன போரட்டத்தை விளக்கி திருவாரூர் மாவட்டம் சார்பாக செயல்வீரர்கள் ஒருங்கினைப்பு குழு கூட்டம் திருவாரூர் மாவட்ட தலைவர் H. பீர் முஹம்மது தலைமையில் கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் நடந்தது இந்த கூட்டத்தில் கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான மரக்கடை, பூதமங்களம்,பொதக்குடி, தண்ணீர்குன்னம், அத்திக்கடை கிளைகளின் செயல்வீரர்கள் கலந்துகொன்டார்கள், முதலில் கூத்தாநல்லூர் கிளை துனை தலைவர் நயினா முஹம்மது இந்த கூட்டத்திற்கான முக்கிய நோக்கம் பற்றி விளக்கமளிக்க பின்பு மாவட்ட தலைவர் அனைத்து கிளைகளிடம் ஆலோசனை கேட்டறிந்து அனைத்து கிளைகளும் இதற்காக உழைத்து அதிகம் அதிகம் மக்களை அழைத்து வரவேண்டும் என கேட்டுக்கொன்டார்.
No comments:
Post a Comment