அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

06 November 2013

ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல தடை - கூத்தாநல்லூரில் போராட்டம் கைது - 05/11/2013

அல்லாஹ்வின் திருப்பெயரால்....,
அஸ்ஸலாமு அலைக்கும்

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 2 வது அலுவலக கட்டுமான பணியை தடை செய்த திருவாரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 05/11/2013 அன்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு  நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது, அதை தொடரந்ந்து நமது கூத்தாநல்லூர் கிளை சாரபாக மக்களை திரட்டி போராட்டத்திற்கு செல்ல தயாராக இருந்தபோது லெட்சுமாங்குடியில் அதிகமான காவலர்கள் நாம் போராட்டத்திற்கு போவதை தடுப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாக நமது கிளை நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்ததும், உடனே மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை என்று கேட்டறிந்து இது நமக்கும் மட்டும் அல்ல அனைத்து ஊர்களிலும் காவல்துறை இந்த போராட்டத்திற்கு செல்ல விடாமல் தடுக்கின்றனர் என்று செய்தி நமக்கு கிடைத்தது, நமது சுற்றுவட்டார கிளைகளான மரக்கடை,பூதமங்களம்,தண்ணீர்குன்னம், பொதக்குடி, அத்திக்கடை மற்றும் மன்னார்குடியிலுந்து கொள்கை சகோதரர்கள் அனைவரும் வாகனத்தில் கூத்தாநல்லூர் மர்கஸில் குழுமினர், பின்பு அனைவரும் மர்கஸ் வளாகத்தில் மசூரா செய்துவிட்டு வரிசையாக அணிஅணியாக சென்று லெட்சுமாங்குடி மெயின் ரோட்டில் கைதானார்கள், பின்பு அவர்களை நாகூரார் திருமன மண்டபத்தில் வைக்கப்பட்டு மதியம் 3.30மணிக்கு விடுவிக்கப்பட்டனர், ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்துகொண்டார்கள், அல்ஹம்துலில்லாஹ்.












No comments: