அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

31 May 2014

ஏழை மாணவருக்கு கல்வி உதவி

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 28.05.2014 அன்று ஏழை மாணவர் BBA படிப்பதற்கு அட்மிசன் மற்றும் விடுதிக்கான பணம் ரூபாய் 35,000/- வழங்கப்பட்டது


23 May 2014

மாற்றுமத சகோதரருக்கு மருத்துவ உதவி‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக குடவாசலில் இருந்து மாற்றுமத சகோதரர் சரவணன் என்பவர் தனக்கு விபத்து ஏற்பட்டு முதுகில் பலத்த அடிபட்டு இருப்பதாகவும் மருத்துவ உதவி வேண்டும் என்று 10 நாட்களுக்கு முன் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தார, அதனையெடுத்து இன்று 23.05.14 அவருக்கு ரூபாய் 5,000/- மருத்துவ உதவி செய்யப்பட்டது.

22 May 2014

ஆக்ஸ்போர்ட் பள்ளிக்கூட வளாகத்தில் வேகத்தடை கோரி‏

கூத்தாநல்லூர் மேலைகடைத்தெருவில் இருக்கும் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கூடத்திற்கு வெளியே மாணவ மாணவிகள் அச்சமில்லாமல் சாலையை கடக்க சாலை இருபுறங்களிலும் வேகத்தடை அமைக்கவேண்டும் என்று கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக இன்று 22.05.2014 கோரிக்கை மனு நகராடசி ஆனையரிடம் கொடுக்கப்பட்டது,இது நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்டது எனினும் இந்த கடிதத்தோடு என்னுடைய கடிதத்தையும் உடனே சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புகிறேன் என்று ஆனையர் உறுதி அளித்தார்கள்.

ஆண்கள் உயர்நிலை பள்ளி பின்புறம் கழிவுகளை எரிப்பதால் அதனுடைய புகை ஊருக்குள்ளே பரவி பல வித வியாதிகளை உண்டு பன்ன கூடிய சூழ்நிலை இருக்கிறது அதையும் உடனே தடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்,அதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்.


15 May 2014

கோடைக்கால பயிற்சி முகாம் 2014

அல்லாஹ்வின் பேரருளாள் கோடைக்கால பயிற்சி முகாம் 2014 சிறப்பாக நடந்து முடிந்தது 4வது முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்,அல்ஹம்துலில்லாஹ். கடைசிநாளான 14.05.14 அன்று 9 நாட்களாக நடத்தப்பட்ட பாடத்திலிருந்து கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டது,இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் பரிசளிப்பு விழா நமது மர்கஸில் நடைபெறும்






11 May 2014

+2 தேர்வுக்கான ரிசல்ட்‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 09.05.14 அன்று +2 தேர்வுக்கான ரிசல்ட் மற்றும் இலவசமாக பிரின்ட் செய்யப்படும் என்ற அறிவிப்பு மர்கஸ் வளாகத்தில் வைக்கப்பட்டது, இதனையடுத்து 19 மாணவர்கள் தங்களது ரிசல்டை தெரிந்து கொண்டு அதனை பிரின்டும் எடுத்துச்சென்றனர்.



04 May 2014

கோடை கால பயிற்சி முகாமின் முதல் நாள்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கோடைக்கால பயிற்சி முகாம் அல்லாஹ்வின் பேரருளாள் இன்றிலுருந்து  04.05.2014 ஆரம்பம் ஆனது, முதல் நாளான இன்று மாணவ மாணவிகள் 47 பேர் கலந்துகொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்.




கோடைகால பயிற்சி முகாமுக்கான விளம்பரம்