அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த 29.05.2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளையின் 2ம் ஆண்டு பொதுக்குழு தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது,
இந்த பொதுக்குழுவை திருவாரூர் மாவட்ட
தலைவர் தலைமை தாங்கினார்,
மர்கஸ் இமாம் S. அப்துல் காதர் சபை
ஒழுங்குகள் பற்றி உரையாற்றினார்.
கிளை தலைவர் A. நெய்னா முஹம்மது
தொகுத்து வழங்கினார்.
கிளை செயலாளர் A. முஹம்மது (அபுபஜ்லான்)
ஆண்டறிக்கை வாசித்தார்.
கிளை துணை செயலாளர் V.M. முஹம்மது
காசிம் 2015ம் ஆண்டு வரவு செலவு கணக்கை வாசித்தார், இதில் ஏதும் சந்தேகம்
இருந்தால் நோண்பு முதல் நாள் வரை பொ1ருளாளரை சந்தித்து சந்தேகங்களை கேட்டு தெளிவுபெறலாம்
என்று உறுப்பினர்களுக்கு நேரம் கொடுக்கப்பட்டது.
குறைகள் விமர்சனம் இருந்தால் வைப்பதற்கு
அனுமதிக்கப்பட்டு கிளை தலைவர் உரிய முறையில் விளக்கம் அளித்தார்.
புதிய கிளையாக கிளை 3
என்று பிரிக்கப்பட்டு தலைவராக ; K.A. அப்துல் நசீர்.
செயலாளராக ; S.H.நூர் முஹம்மது பொருளாளராக :
திப்பு ரஹீம் துணை தலைவராக : V.M.S. சாகுல்
ஹமீது துணை செயலாளராக : S.M.K. ஜஃப்ரான்
நியமிக்கப்பட்டார்கள்.
கூத்தாநல்லூர் கிளை 3
க்கு ஜமாலியா தெரு, 2வது கமாலியா தெரு, இஸ்மாயில் தெரு, ஜாவியா தெரு மற்றும்
ஹமீதியா தெரு ஆகிய 5 தெருக்கள் இந்த கிளையின் கீழ் வரும் என்று ஏகமனதாக
முடிவெடுக்கப்பட்டது,
செயலாளர் நன்றியுரையுடன் பொதுக்குழு
சிறப்பாக முடிந்த்து, புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை 1