அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

31 August 2013

வாய் திறக்காதது ஏன்? போஸ்டர் ஒட்டப்பட்டது

கூத்தாநல்லூர் கிளை சார்பாக வாய் திறக்காதது ஏன்? போஸ்டரை கூத்தாநல்லூரில் 9 இடத்தில் பொதுமக்களின் விழிப்புனர்வுக்காக ஒட்டப்பட்டது.


TNTJ திருவாரூர் மாவட்ட தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கூத்தாநல்லூர் கிளையில் நேற்று 30/08/2013 இஷாவுக்கு பிறகு மாவட்ட சுற்றறிக்கை சம்பந்தமாகவும் எதிர்வரும் காலங்களிள் செய்யும் தாவா பணிகளை பற்றியும் திருவாரூர் மாவட்ட தலைவர் H. பீர் முஹம்மது தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது 

26 August 2013

2013 ரமலான் மாதம் நடந்த மார்க்க கேள்வி பதில் போட்டியின் கேள்வித்தாள்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக நடந்த மார்க்க கேள்வி பதில் போட்டியின் கேள்வித்தாள் கீழே இனைக்கப்பட்டுள்ளன.








23 August 2013

திருக்குர்ஆன் அன்பளிப்பு - 22/08/2013

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 29/06/2013 புறநூலகம் அமைத்து மாற்று மத தாவா செய்தோம், அப்போது மாற்று மத சகோதரர் அசோகன் MA  அவர்கள் தமக்கு மொழிப்பெயர்ப்பு குர்ஆன் தேவை என்று கேட்டு அஞ்சல் அட்டையில் தலைமைக்கு தபால் அனுப்பியிருந்தார், தலைமை மூலம் இன்று நமது கிளைக்கு திருக்குர்ஆனும் சிடியும் வந்தது அதை இன்று மாற்று மத சகோதரர் அசோகன் MA அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும் சிடியும் கொடுக்கப்பட்டுஎந்த சந்தேகம் இருந்தாலும் கிளையை அனுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

18 August 2013

மாதாந்திர பெண்கள் பயான் - 18/08/2013

கூத்தாநல்லூர் கிளை சார்பாக இன்று 18/08/2013 அஸருக்கு பின் மாலை 5.00 மணிக்கு பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளி இமாம் சகோதரர் S. அப்துல் காதர் அவர்கள் சஹாபிய பெண்களும் இன்றைய பெண்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், பெண்கள் ஆர்வத்துடன் இதில் பங்கு பெற்றனர், ஆண்களும் இந்த பயானை கேட்டு பயன்பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நடைபெற்ற நாள் : 18/08/2013 (ஞாயிற்று கிழமை)
இடம் : தவ்ஹீத் மர்கஸ் - கூத்தாநல்லூர்
நேரம் : மாலை 5.00 மணிஅளவில்
உரை : பள்ளி இமாம் S. அப்துல் காதர்
தலைப்பு : சஹாபிய பெண்களும் இன்றைய பெண்களும் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கூத்தாநல்லூர் கிளை





15 August 2013

ஃபித்ரா வரவு செலவு கணக்கு விபரம் 2013

இந்த வருட கூத்தாநல்லூர் கிளை சார்பாக கொடுக்கப்பட்ட ஃபித்ரா வரவு - செலவு கணக்கு விபரம் இனைக்கப்பட்டுள்ளது


13 August 2013

தீ பிடித்த வீட்டின் மேற்கூரை மற்றும் மின்சார வயர்கள் சரி செய்யப்பட்டன

கடந்த மாதம் அண்ணாகாலனியில் ஒரு சகோதரரின் வீடு தீ பிடித்து கூரை மற்றும் பல பொருட்கள் எரிந்து சாம்பலாயின, இந்த சம்பவத்தை தொடர்ந்து  நமது கூத்தாநல்லூர் கிளை சார்பாக பொது மக்களிடம் விசயத்தை அறிவித்து அவர்களிடம் பொருளாதாரத்தை திரட்டி தீக்கிரையான வீட்டின் மேற்கூரைக்கு சிமென்ட சீட், மின்சார வயர்கள் மாற்றப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

எரிந்து முடிந்த வீட்டின் புகைப்படமும், சரிசெய்யப்பட்ட வீட்டின் புகைப்படமும் இனைக்கப்பட்டுள்ளது.




09 August 2013

பெருநாள் திடல் தொழுகை - 09-08-2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கூத்தாநல்லூர் கிளை சார்பாக நடத்தப்பட்ட பெருநாள் தொழுகை புகைப்படங்கள் 

குறிப்பு : ஆண்களுக்கும் பெண்களுக்கும் திடலில் தொழுவதுற்கு இடமில்லை, மாற்று ஏற்பாடு செய்ய முடியாமல் மர்கஸ் உள்ளே ஆண்களுக்கு கீழேயும் பெண்களுகளுக்கு மேல் மாடியிலும் ஏற்பாடு செய்யப்பட்டது,  புகழனைத்தும் அல்லாஹ்விற்கே


















ஃபித்ரா வினியோக புகைபடங்கள் - 08.08.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கூத்தாநல்லூர் கிளை சார்பாக ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.














06 August 2013

நபி வழி முறையில் ஜனாஸா தொழுகை - கூத்தாநல்லூர் - 05-08-2013

கொள்கை சகோதரரின் தாயார் இன்று நமதூரில் காலை வபாத்தானார்கள், அவர்களின் நல்லடக்கம் இன்று மாலை நபி வழியின் அடிப்படையில் நல்லடக்கம் செய்யப்பட்டது, புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.