அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
23 October 2016
14 September 2016
பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 13.09.2016 காலை 7.45 மணிக்கு தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் பெருநாள் திடல் தொழுகை அல்லாஹ்வின் பேரருளால் சிறப்பாக நடந்தது, சகோதர சகோதரிகள் திரளாக இந்த நபி வழி சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
ஜஷாக்கல்லாஹீ கைரன்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை
ஜஷாக்கல்லாஹீ கைரன்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை
16 August 2016
பெண்கள் பயான் 14.08.2016
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 14.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சகோதரர் மர்கஸின் இமாம் அப்துல் காதர் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் 35 க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர் சகோதரர் அப்துல் மாலிக் (மரக்கடை) அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
புகைப்படம் எடுக்கப்படவில்லை
புகைப்படம் எடுக்கப்படவில்லை
தெருமுனை கூட்டம் 06.08.2016
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக தெருமுனை கூட்டம் முதல் ரஹ்மானியா தெருவில் இன்று 06.08.16 சனிக்கிழமை 7மணி அளவில் அல்லாஹ்வின் அருளாள் சிறப்பாக நடந்தது, முதல் உரையாக மர்கஸ் இமாம் அப்துல் காதர் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பிலும் முஹம்மது ரஸுலுல்லாஹ் என்ற தலைப்பில் சகோ. கமால் misc அவர்களும் சிறப்பாக உரையாறாறினார்கள், ஆண்களும்பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்,
அல்ஹம்துலில்லாஹ்.
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் நகர கிளை
கூத்தாநல்லூர் நகர கிளை
07 July 2016
பெருநாள் தொழுகை 06.07.2016
கூத்தாநல்லூர் கிளை சார்பாக 06.07.2016 புதன் கிழமை பெருநாள் தொழுகை தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது, இதில் 500 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டனர். சிறப்பு தொழுகை சகோ. சாகுல் ஹமீத் தொழுவித்தார்கள் பெருநாள் உரை மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அல்லாஹ்வை போற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
03 July 2016
பெருநாள் திடல் தொழுகை அறிவிப்பு
பெருநாள் திடல் தொழுகை அறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்
தொழுகை நேரம் : காலை சரியாக 7.45
இடம் : தவ்ஹீத் மர்கஸ் வளாகம்
தொழுகை : சகோதரர் சாகுல் ஹமீத்
உரை : மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர்.
சகோதர சகோதரிகள் திரளாக வந்து கலந்து கொள்ளும்படி அழைக்கிறோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் நகர கிளை
திருவாரூர் மாவட்டம்.
கூத்தாநல்லூர் நகர கிளை
திருவாரூர் மாவட்டம்.
08 June 2016
30 May 2016
பெண்கள் பயான் 28.05.2016
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 28.05.2016 சனிக்கிழமை அன்று சகோதரர் ஜபருல்லாஹ் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் 30க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர் மர்கஸ் இமாம் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் பெண்களுக்கு முன் மாதிரி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
கிளை பொதுக்குழு 2ம் ஆண்டு 29.05.2016
அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த 29.05.2016 அன்று தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளையின் 2ம் ஆண்டு பொதுக்குழு தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது,
இந்த பொதுக்குழுவை திருவாரூர் மாவட்ட
தலைவர் தலைமை தாங்கினார்,
மர்கஸ் இமாம் S. அப்துல் காதர் சபை
ஒழுங்குகள் பற்றி உரையாற்றினார்.
கிளை தலைவர் A. நெய்னா முஹம்மது
தொகுத்து வழங்கினார்.
கிளை செயலாளர் A. முஹம்மது (அபுபஜ்லான்)
ஆண்டறிக்கை வாசித்தார்.
கிளை துணை செயலாளர் V.M. முஹம்மது
காசிம் 2015ம் ஆண்டு வரவு செலவு கணக்கை வாசித்தார், இதில் ஏதும் சந்தேகம்
இருந்தால் நோண்பு முதல் நாள் வரை பொ1ருளாளரை சந்தித்து சந்தேகங்களை கேட்டு தெளிவுபெறலாம்
என்று உறுப்பினர்களுக்கு நேரம் கொடுக்கப்பட்டது.
குறைகள் விமர்சனம் இருந்தால் வைப்பதற்கு
அனுமதிக்கப்பட்டு கிளை தலைவர் உரிய முறையில் விளக்கம் அளித்தார்.
புதிய கிளையாக கிளை 3
என்று பிரிக்கப்பட்டு தலைவராக ; K.A. அப்துல் நசீர்.
செயலாளராக ; S.H.நூர் முஹம்மது பொருளாளராக :
திப்பு ரஹீம் துணை தலைவராக : V.M.S. சாகுல்
ஹமீது துணை செயலாளராக : S.M.K. ஜஃப்ரான்
நியமிக்கப்பட்டார்கள்.
கூத்தாநல்லூர் கிளை 3
க்கு ஜமாலியா தெரு, 2வது கமாலியா தெரு, இஸ்மாயில் தெரு, ஜாவியா தெரு மற்றும்
ஹமீதியா தெரு ஆகிய 5 தெருக்கள் இந்த கிளையின் கீழ் வரும் என்று ஏகமனதாக
முடிவெடுக்கப்பட்டது,
செயலாளர் நன்றியுரையுடன் பொதுக்குழு
சிறப்பாக முடிந்த்து, புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை 1
23 May 2016
ரமளான் 2015 கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி
கூத்தாநல்லூர் கிளை சார்பாக ரமளான் 2015 கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டு 22.05.2016 அன்று ரஹ்மானியா தெருவில் தெருமுனை கூட்டத்தோடு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. முதல் பரிசாக DOUBLE DOOR FRIDGE இரண்டாவது பரிசாக WASHING MACHINE மூன்றாவது பரிசாக STEEL BEROL மற்றும் 10 ஆறுதல் பரிசாக ரூபாய் 1000 கொடுக்கப்பட்டது எழுதியவர்கள் அனைவருக்கு அவ்ரகள் எடுத்த மதிப்பெண்க்கு ஏற்ப பொருட்கள் கொடுக்கப்பட்டன.
தெருமுனை கூட்டம் 22.05.2016
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 22.05.2016 அன்று தெருமுனைகூட்டம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி ரஹ்மானியா தெருவில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்புரையாக சகோ. சபீர் அலி அவர்கள் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள், கூத்தாநல்லூர் மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் மறுமை வெற்றி யாருக்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பராஅத் இரவாக இருந்ததால் பராஅத் இரவு பித்அத்தானது என்று சிறப்பாக பேசினார்கள், இந்த கூட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)


















































