அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

28 September 2015

பெண்கள் பயான் 05.09.2015

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 5/9/2015 அன்று நேருஜிரோட்டில்  நடந்த பெண்கள் பயான். உரை. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர். தலைப்பு: இதுதான் இஸ்லாம். சுமார் 40 சகோதரிகள் கலந்துகொண்டனர்.


பெண்கள் பயான் 21.08.2015

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக 21.08.2015 அன்று ஷவ்கத் அலி தெருவில் நடந்த பெண்கள் பயானில் மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் பித் அத் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

18 July 2015

பெருநாள் தொழுகை - கூத்தாநல்லூர் கிளை

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 18.07.2015 அன்று தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது, பெருநாள் தொழுகை சகோ. சாகுல் ஹமீது அவர்கள் நடத்தினார்கள் பெருநாள் உரை மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டனர். 
திடலில் இடம் இல்லாமல் பெண்கள் பள்ளிக்கு உள்ளேயும் ஆண்கள் தெருவில் நின்றும் தொழுதனர் . அல்ஹம்துலில்லாஹ்.







பித்ரா வினியோகம் - கூத்தாநல்லூர் கிளை

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 17.07.2015 அன்று ஏழை எளிய மக்கள் 500 குடும்பத்திற்கு ரூபாய் 300 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.


06 June 2015

மருத்துவ உதவி - 06.06.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 06.06.2015 அன்று சிறுவனின் கை அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 20,000 வழங்கப்பட்டது.



17 May 2015

மருத்துவ முகாமில் திருக்குர்ஆன் அன்பளிப்பு - 17.05.2015‏

கூத்தாநல்லூர் நகர கிளை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இனைந்து 17.05.2015 ஞாயிறு அன்று  இலவசமாக மாபெரும் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது, இந்த முகாமில் கலந்துகொண்ட டாக்டர்கள், உதவியாளர்கள், நர்ஸ் மற்றும் கலந்துகொண்ட மாற்று மத சகோதரர்களுக்குதிருக்குர்ஆன் தமிழாக்கம் 40 மற்றும் முஸ்லீம்கள் தீவிரவாதிகள் ? என்ற புத்தகம் 40 இலவசமாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.









மருத்துவ முகாம் - 17.05.2015‏

கூத்தாநல்லூர் நகர கிளை மற்றும் சென்னை காவேரி மருத்துவமனை இனைந்து 17.05.2015 ஞாயிறு அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை இலவசமாக மாபெரும் சிறப்பு மருத்துவமுகாம் தவ்ஹீத் மர்கஸில் அல்லாஹ்வின் பேருதவியால் சிறப்பாக நடந்து முடிந்தது. , சர்க்கரை, இரத்த அழுத்தம், இ.சி.ஜி, எக்கோ, எலும்பு அடர்த்தி போன்ற  பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டு  இதில் இருதயம் , மூட்டு மற்றும் எலும்பு சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்கள், 140 க்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.






12 May 2015

வட்டி இல்லா கடன்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 11.05.2015 அன்று ஒரு சகோதரருக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தின் மூலம் ரூபாய் 10,000/- கொடுக்கப்பட்டது.



08 May 2015

கோடைகால பயிற்சி முகாம்‏

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக 02.05.2015 முதல் 11.05.2015 வரை கோடைக்கால பயிற்சி முகாம் கிளை மர்கஸில் நடைபெற்று வருகிறது, இதில் 78 மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்கின்றனர்.அல்ஹம்துலில்லாஹ்


மாபெரும் மருத்துவ சிறப்பு முகாம் - கூத்தாநல்லூரில்‏


06 May 2015

புத்தக அன்பளிப்பு

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 05.05.15 அன்று மாற்று மத சகோதரருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


பெண்கள் பயான் 04.05.2015

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 04.05.15 அன்று அக்கரை புது தெருவில் உள்ள ஒரு கொள்கை சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்.


புத்தக அன்பளிப்பு

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 03.05.15 அன்று மாற்று மத சகோதரருக்கு சகோதரர் அல்தாபி எழுதிய முஸ்லீம்கள் தீவிரவாதிகள் ? புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


01 May 2015

மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 01.05.2015 அன்று இளங்கோ என்ற மாற்று மத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

23 April 2015

தெருமுனை பிரச்சாரம் - 19.04.2015

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக 19.04.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் அக்கரை புதுதெருவில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்.

பெண்கள் பயான் 18.04.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 18.04.2015 அன்று ஷவ்கத் அலி தெருவில் ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

13 April 2015

வட்டி இல்லா கடன்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 13.04.2015 அன்று ஒரு சகோதரருக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தின் மூலம் ரூபாய் 10,000/- கொடுக்கப்பட்டது.

பெண்கள் பயான் 12.04.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 12.04.2015 அன்று அக்கரை புது தெருவில் ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


07 April 2015

STV யில் நமது கிளை சார்பாக மார்க்க நிகழ்ச்சி


பெண்கள் பயான் 04.04.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 04..04.2015 அன்று ஷவ்கத் அலி தெருவில் ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர்  நபிஸா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

18 March 2015

மாற்று மத சகோதரருக்கு இலவச திருக்குர்ஆன் தமிழாக்கம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 15.03.2015 அன்று மாற்று மத சகோதரர் சிவகனபதி இஸ்லாம் குறித்த சந்தேகங்களோடு நமது மர்கஸிர்க்கு வந்தார் அவருக்கு மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் அவருடைய கேள்விகளுக்கு பதில் கொடுத்தார் மற்றும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக கொடுக்கப்பட்டுது, என்ன சந்தேகம் இருந்தாலும் நம்மிடம் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு அவருடைய நம்பரையும் வாங்கிகொண்டோம்.

குறிப்பு : இந்த சகோதரர் இன்று அக்கரை புதுதெருவில் நடந்த பெண்கள் பயானிலும் கலந்து கொண்டு நமது அலுவலகத்துக்கு சந்தேகத்தோடு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வாதார உதவி 15.03.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 15.03.2015 அன்று ஒரு சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது

பெண்கள் பயான் 15.03.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 15.03.2015 அன்று அக்கரை புதுதெருவில் ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர்  மற்றும் சகோதரி நபிஸா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள், இதில் 30 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்துகொண்டார்கள்.

குறிப்பு : கடந்த 14.03.2015 அன்று நடந்த பெண்கள் பயானில் கலந்து கொண்ட சகோதரிகள் மீண்டும் நாளை பெண்கள் பயான் நடத்தவேண்டும் என்று கேட்டதால் மீண்டும் இன்று நடத்தப்பட்டது.

பெண்கள் பயான் 14.03.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 14.03.2015 அன்று அக்கரை புதுதெருவில் ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள், இதில் 20 க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்துகொண்டார்கள்.


தெருமுனை பிரச்சாரம் - 08.03.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 08.03.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் அக்கரை புதுதெருவில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்.





09 March 2015

இது தான் இஸ்லாம் – அல்தாஃபி, 11.01.2015-கூத்தாநல்லூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 11.01.2015 அன்று நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தின் வீடியோ. உரை, அல்தாஃபி.


உதவி 04.03.15‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 04.03.15 அன்று அடியக்கமங்களத்தில் உள்ள ஒரு வீடு தீபிடித்து மேற்கூரை எரிந்து போனது அதற்காக கூத்தாநல்லூரில் பொதுமக்களிடம் ரூபாய் 3000 வசூலித்து அடியக்கமங்களம் கிளை நிர்வாகியிடம் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.

வட்டி இல்லா கடன்‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 04.03.2015 அன்று ஒரு சகோதரருக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தின் மூலம் ரூபாய் 4,000/- கொடுக்கப்பட்டது..



தெருமுனை பிரச்சாரம் - 08.03.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 08.03.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் அக்கரை புதுதெருவில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்.


லோக்கல் சேனலில் மார்க்க நிகழ்ச்சி 2வது வாரம்‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக அல்லாஹ்வின் அருளாள் இரண்டாவது வாரமாக  லோக்கல் S டிவியில் ஞாயிற்றுகிழமை  மாலை 7 மணி முதல் 8 மணி வரை நமது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆகின்றன, இரண்டாவது வாரமானகடந்த 08.03.2015 சகோ. அல்தாஃபி கூத்தாநல்லூரில்  உரையாற்றியது ஔிபரப்பு செய்யப்பட்டது.

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் 13.03.2015 வெள்ளிக்கிழமை- பூதமங்கலத்தில்‏


01 March 2015

லோக்கல் சேனலில் மார்க்க நிகழ்ச்சி வாரம்தோறும்‏

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கூத்தாநல்லூர் கிளை சார்பாக அல்லாஹ்வின் அருளாள் இந்த மாதம் முதல் லோக்கல் S டிவியில் ஞாயிற்றுகிழமை தோறும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை நமது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆகின்றன, முதல் வாரமான இன்று 01.03.2015 சகோ. ரஸ்மின் ஆற்றிய உரை ஔிபரப்பு செய்யப்பட்டது.



இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கூத்தாநல்லூர் கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை இன்று (01.03.15)இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் அல்லாஹ்வின் பேரருளாள் 50 சகோதர சகோதரிகள் இரத்த கொடை அளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்,