அல்லாஹ்வின் கிருபையால் 10-03-2013 அன்று ஞாயிற்று கிழமை சரியாக 5.00 மணியளவில் மதரஸத்துல் ரய்யான் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர் இமாம் அப்துல் ஹமீதுமற்றும் சகோதரிகள் உரை நிகழ்த்தினர் இன்ஷாஅல்லாஹ் 11-03-2013 முதல் மாணவர்களின் பள்ளி வகுப்புக்கு ஏற்ப மாலை5.15 முதல் 6.30 வரை மதரஸா நடைபெறும், சகோதரர்கள் தங்களுடைய உறவினர்களிடமும் மற்றும் நண்பர்களிடமும் இவ்விஷயத்தை தெரிவித்து அல்லாஹ்வின் வேதத்தைகற்று கொள்ள குழந்தைகள் அனுப்பி தரும்படி கேட்டுகொள்கிறோம்.
4 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் .
இமாம் அவர்களுக்கும் பெண்களுக்கும் இடையே திரை அமைத்து இருக்க வேண்டும்...
வ அலைக்கும் சலாம், உங்களுடைய முன்னரே பார்த்தோம், அதற்கான பதிலை தேடிக்கொண்டிருந்தோம் இன்று தான் கிடைத்தது, அதையே பதிலாக தருகிறோம்.
நபியவா்கள் திரையைப் பயன் படுத்தினார்களா?
நபியவா்களின் காலத்தில் நபி(ஸல்)அவா்கள் பெண்களுக்கு மத்தியில் மார்கப் பிரச்சாரத்தை செய்திருக்கிறார்கள்.அப்படி பிரச்சாரம் செய்கின்ற நேரங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் பிரித்து திரை ஏதும் பயண்படுத்தவில்லை.
தற்காலத்தில் யார் அப்படி திரை போட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும் என கட்டாயப் படுத்துகிறார்களோ அவர்கள் இதற்குறிய ஆதாரத்தை முன்வைக்க வேண்டும்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹஜ்ஜுப் பெருநாள்’ அல்லது ‘நோன்புப் பெருநாள்’ தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று ”பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகüல் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது’ என்று குறிப்பிட்டார்கள். அப்போது பெண்கள் நடுவிலுருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து . ”ஏன் அல்லாஹ்வின் தூதரே! (எங்களுக்கு இந்த நிலை)?” கேட்டார்கள். ”நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள் மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை அறிவிலும் மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்” என்று கூறினார்கள். அப்போதும் அப்பெண்கள் ”மார்க்த்திலும் அறிவிலும் எங்களுடைய குறைபாடு என்ன அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். ”பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க அப்பெண்கள் ”ஆம் (பாதியளவுதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”அதுதான் அவளது அறிவின் குறைபாடாகும்:” என்று கூறிவிட்டு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்க மீண்டும் அப்பெண்கள் ”ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்” என்று கூறினார்கள்.(புகாரி 304)
மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் பெருநாள் தினத்தில் பெண்கள் பகுதிக்கு சென்று அங்குள்ள பெண்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.ஆனால் அங்கு திரை போட்டு பேசவில்லை.
பொதுவாகவே பெண்களுக்கு மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது இந்த நடை முறையைத் தான் நாம் கையால வேண்டும் பேணுதல் என்று கூறிக் கொண்டு நபியவர்கள் காட்டித் தராத காரியங்களை நாமாக மார்க்கம் என்று புகுத்துதல் கூடாது.
இதே நேரம் பள்ளியில் நுழையும் போது மற்றவர்களால் பெண்களுக்கு ஏதும் பிரச்சினை ஏற்படும் என்று நாம் கருதும் பட்சத்தில் ஓரங்களில் திரைகளை போட்டுக் கொள்வதில் எந்தத் தவரும் இல்லை.
ஆனால் உரை நிகழ்த்தும் இமாமுக்கும் அதனை கேற்பவர்களுக்கும் மத்தியில் திரை போட வேண்டும் என்று மார்க்கத்தில் இல்லாத ஒரு சட்டத்தை தினிப்பது குற்றமாகும்.
இந்த பதில் கீழே உள்ள லிங்கில் இருந்து எடுக்கப்பட்டது
http://safwanlanka.wordpress.com/2012/10/28/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/
நான் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை.
மற்றவர்களால் பெண்களுக்கு ஏதும் பிரச்சினை ஏற்படும் என்று நாம் கருதும் பட்சத்தில் ஓரங்களில் திரைகளை போட்டுக் கொள்வதில் எந்தத் தவரும் இல்லை.
Post a Comment