ஆக்கம் : சகோ, பாசித் பரீத் ஜஷாக்கல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்...
அருமைப் பெரியோர்களே!தாய்மார்களே!
இஸ்லாத்தின் இறுதிக் கடமையாகிய ஹஜ் செய்யும் பாக்கியம் பொதுவாக எல்லோருக்கும் வாய்ப்பில்லை. வசதியிருந்தால் ஆரோக்கியம் ஓத்துவராது.ஆரோக்கியமிருந்தால் வசதி வாய்ப்பு இருக்காது.இத்தகைய சோதனைகளுக்கு மத்தியில் ஹஜ் செய்ய விதியாக்கப்பட்டவர்கள் கூட அக் கடமையின் நோக்கத்தைக் குறித்து சரிவர அறியாமல் இருந்து வருவது வேதனைக்குரியது.
அல்லாஹ்வின் உற்ற நண்பராகிய இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களது குடும்பத்தாரும் சந்தித்த சோதனைகளை நினைவு கூரும் விதமாக நபிகள் நாயகம் சல் அவர்களின் உம்மத்தார்கள் அனைவருக்கும் கடமையாக்கப் பட்டதென்றால் இப்ராஹிம் நபியின் வரலாற்றினை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் அறிய வேண்டியுள்ளது.அறியாததன் விளைவுதான் இன்று இனைவைப்புத் தளங்களில் பாத்திஹா ஓதிவிட்டு ஹஜ்ஜுக்கு செல்லும் அவலமும் தற்போது அரங்கேறி வருகிறது...
இப்ராஹிம் நபியவர்களைக் குறித்து இறைவன் தனது திருமறையில்....
இறைவனுக்கு கட்டுப்படுமாறு இப்ராஹிம் நபியவர்களுக்கு வலியுறுத்தப்பட்டால் அகிலத்தின் அதிபதியாகிய இறைவனுக்கு கட்டுப்பட்டேன் என்பது மட்டுமே அவர்களின் பதிலாக இருந்தது என்று அல்லாஹ் அவர்களை சிலாகித்து கூறுகிறான்.
இன்று நம்மில் பலர் இறைவனின் கட்டளைகள் இது தான் எனத்தெளிவாக தெரிந்தும் அதை நிராகரிப்போர்களாகவும் அலட்சியமாக கருதுபவர்களாகவும் வாழ்ந்து வருகிறோம்.
ஏகத்துவத்தின் எதிரிகளாகிய சிலை வணக்கத்தையும் இனைவைப்புக் கொள்கைகளையும் நஞ்சு போல் வெறுத்து அதை நேசிப்பவர்களை விட்டும் ஒதுங்கி ஓரிறைக் கொள்கையை நிலைநாட்ட அரும்பாடுபட்டார்கள் இன்று நம்மில் பலர் இனைவைப்புக் கொள்கைகளையே வணக்கமாக மாற்றிக் கொண்டு அத்தகைய வழிகேட்டில் உறுதியாக நிற்கும் அவலங்களும் வேதனைக்குறியது.
நெருப்பில் வீசப்பட்ட போதும் தமது குடும்பங்களால் சொந்தங்களால் பல இன்னல்களுக்கு ஆளான போதும் நிலைகுலையாமல் உறுதியோடு ஓரிறையை மட்டும் வழிபட்டு மக்களையும் சீர்திருத்த முயன்ற மாமனிதர் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
அல்லாஹ் என் குடும்பத்தை நீரில்லா கடும் வெப்பமிகுந்த சுடும் பாலைவனத்தில் விட்டுவிடச் சொன்னால் கூட எவ்வித சலனமுமில்லாமல் அவனுக்கு கட்டுப்படுவேன் .எனது மகனை அறுத்துப் பலியிட சொன்னால் சிறிதும் தயக்கமின்றி அவனுக்காக அதனைச் செய்ய தயாராவேன் என்பது போன்ற அவர்களின் உறுதியிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினை உள்ளது.
தண்ணீருக்காக கடும் வெப்பம் நிறைந்த சுடும் பாலைவனத்தில் அவர்களது துணைவியார் அவர்கள் சஃபா மர்வாவில் ஓட்டமிட்டு தேடியதும் மகனை அறுத்துப் பலியிட சொன்னதையும் நினைவு கூறும் வண்ணம் இன்று ஹாஜிகளுக்கு சஃபா மர்வா ஓட்டமும் குர்பானியும் கடமையென்றால் அவர்களைப் போல் நாமும் ஓரிறைக் கொள்கையில் உறுதியோடு நிலைத்து நிற்கும் இறையச்சத்தை நம்மில் வரவழைக்கவே என்பதை ஹாஜிகள் மற்றும் நம் அனைவரும் இச்சம்பவங்களிலிருந்து உணர வேண்டும்.
இதோ வந்துவிட்டேன் இறைவா! புகழனைத்தும் உனக்கே உரித்தானது!உனக்கு நிகரானவர் எவருமில்லை இறைவா! என்ற தல்பியாவை உள்ளத்தில் ஏந்திவிட்டு இறைவனுக்கு நிகராக மரணித்த சில பெரியோர்களை வைத்து இனை கற்பிக்கப்படும் தலங்களிலிருந்தே புறப்பட்டுச் சென்றால் அத்தகைய நம் செயல்பாடுகள் இறைவனுக்கு உகப்பானாதா? அதை இறைவன் விரும்புவானா?என்றும் நாம் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.
"எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்" என்றும் கூறுவீராக!
அல்அன்ஆம் 162
ஹாஜிமார்களே! உணருங்கள் ஹஜ் கடமையிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினை ஏகத்துவத்தில் நிலைத்து நிற்க வேண்டுமென்பதே.
அன்று பிறந்த பாலகனைப் போல் ஹஜ் கிரீடைகளை முடித்துக் கொண்டு திரும்பும் நீங்கள் இப்ராஹிம் நபியின் மார்க்கத்தில் நிலைத்து நின்று வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று உறுதி கொள்ளுங்கள்.அவர்களது வரலாற்றினை என்றும் நினைவில் வையுங்கள்.
உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது" என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. "உங்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ் விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை" என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) "எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது"
அல்மும்தஹினா: 4
இனைவைப்புகளையும் அதை ஊக்குவிக்கும் தலங்களின் நிழலையும் மரணம் வரை நெருங்க மாட்டேன் என்ற நிய்யத்தை உள்ளத்தில் ஏந்திப் புறப்படுங்கள் .இன்ஷா அல்லாஹ் ஏக இறைவன் ஈருலகிலும் துனை நிற்பான்.
வஸ்ஸலாம்
பாசித் பரீத்.

No comments:
Post a Comment