அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

28 December 2012

ஸஃபர் மாதமும் மூஸ்லீம்கள் நிலையும்

                  
கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ் நோட்டீஸ்     வினியோகம் -26-12-2012
ஸஃபர் மாதமும் மூஸ்லீம்கள் நிலையும் என்ற தலைப்பின்கீழ் இம்மாதத்தை பற்றி தவறாக விளங்கி வைத்து இருக்கும் நமது மக்களுக்குஎளிதில் புரியும் படி இம்மாதத்தை பற்றியும், காலத்தைப்பற்றியும் இஸ்லாம் கூறுவது என்ன என்பதை கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ் நோட்டீஸாக வெளியிட்டது, இந்த நோட்டீஸை வீடு வீடாக சென்று நேரடியாக வினியோகம் செய்யப்பட்டது.
புகழ் அனைத்தும் இறைவனுக்கே….
நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் திருக்குர்ஆன் 3:104




24 December 2012

பெண்கள் பயான் 23-12-2012


அல்லாஹ்வின் திருப்பெயரால் 
அஸ்ஸலாமு அலைக்கும்
பெண்கள் பயான் 23-12-2012
கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் பெண்கள் பயான் 23/12/2012 அஸருக்கு பின் 4.30 மணியளவில் துவங்கி 5.45 மணிக்கு நிறைவுப்பெற்றது, சகோதரிகள்,தாய்மார்கள் கலந்துகொன்டனர்.சகோதரி நபிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்…..
புகழ் அனைத்தும் இறைவனுக்கே….

21 December 2012

23/12/2012 அன்று இன்ஷா அல்லாஹ் பெண்கள் பயான்


 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
இன்ஷாஅல்லாஹ்…………. வருகின்ற 23.12.2012 ஞாயிறு கிழமை மாலை 4.00 மணியளவில்....
 பெண்கள் பயான்  கூத்தாநல்லூர்  தவ்ஹீத் மர்கஸில்  நடத்த உள்ளோம் தாங்களது குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் & சகோதரிகள் தவறாமல் கலந்து கொள்ளவதற்க்கு குடும்பத்தினர்க்கு தகவல் கொடுத்து இந்த பயானில் தவறாது கலந்துக்கொள்ளச் சொல்லவும், வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
உரையாற்றுபவர் - சகோதரி நபிஸா ஆலிமா அவர்கள்
தலைப்பு : பெற்றோர்களை எவ்வாறு காப்பது.

மாற்றுமத தாவா -20-12-2012


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ***மாமனிதர் நபிகள் நாயகம்*** என்ற புத்தகத்தை மாற்றுமத சகோதரர்களுக்கும் கூத்தாநல்லூர் நகராட்சி ஊழியர்கள் மற்றும் பல சகோதரர்களுக்கு நேரடியாக சென்று இப்புத்தகத்தை கொடுக்கப்பட்டது இன்ஷாஅல்லாஹ் இந்த சகோதரர்களுக்கு தூய்மையான இஸ்லாம் கிடைக்க ஏக இறைவனை பிரத்தினை செய்ய வேண்டுகிறோம்.புகழ் அனைத்து அல்லாவிற்க்கே…..



உலகம் அழியப்போகின்றதா? பிளக்ஸ் போர்டு 18/12/2012


உலகம் அழியப்போகின்றதா?
 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…….
வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதாஎன்ற கேள்விக்குறியோடுபத்திரிக்கைகளும்தொலைக்காட்சி செய்தி சேனல்களும் ஏற்படுத்திய பீதிதான் தற்போதுமுக்கிய இடத்தைப் பிடித்த பரபரப்பு செய்திஉலகம் அழியப்போகின்றது என்று இதற்கு முன்பாக இதுபோல ஒரு புரளியை கிளப்பினார்கள். அதுபோல இப்போது இந்தப் புரளியை கிளப்பிவிட்டுள்ளார்கள். இப்படி உலகமே மூடநம்பிக்கையிலும்பீதியிலும் உரைந்துள்ள இவ்வேளையில் உண்மையான முஸ்லிம்களுக்கு இந்த புரளி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதே இஸ்லாம்தான் இறைவனின் மார்க்கம் என்பதற்கு குராஆன் வசனம் ஆதாரமாகும் என்பதனை.பொது மக்கள் அறிவிதற்க்காக் கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் சார்பாக பொது இடங்களில் வைத்து உள்ள பிளக்ஸ் போர்ட்கள் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே..


மாவட்ட ஒருங்கினைப்பு கூட்டம் 16/12/2012‏-தவ்ஹீத் மர்கஸ்


                          அல்லாஹ்வின் திருப்பெயரால்                                                               ஒருங்கினைப்பு கூட்டம் -16-12-2012
கூத்தாநல்லூர் தவ்ஹீத் பள்ளிவாசலில் திருவாரூர் மாவட்ட ஒருங்கினைப்பு கூட்டம் 16.12.2012 ஞாயிற்றுகிழமை மகரிபுக்கு பின்னர் திருவாரூர் மாவட்ட துணை தலைவர் பீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதில்அருகில்உள்ளமரக்கடை,தண்ணீர்குன்னம்,பொதக்குடி,அத்திக்கடை,  பூதமங்கலம் ஆகிய கிளைககள் கலந்து கொண்டனர்.  இந்த ஒருங்கினைந்த கிளைகளை கொண்டு எவ்வாறு தாவா செய்ய வேண்டும் என்பதை பற்றியும், மாற்றுமத சகோதர்களிடம் தாவாவை எத்தி வைக்க எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதனை பற்றி மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள்அறிவுறுத்தினார் மேலும்  மின்கட்டணம் செலுத்துவத்ற்க்கு பொது மக்கள் பெரும் அவதிக்குள் ஆகிறார்கள் அதனை சுட்டி காட்டி பொது மக்கள்மின்கட்டணம் செலுத்துவதற்க்கு தனி சிறப்பு ஏற்பாடு செய்ய முன் வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



மருத்துவ உதவி -12.12.2012


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கூத்தாநல்லூரை சேர்ந்த சாஹீல் என்ற சகோதரரின்  மகன் அவர்களின் நீர் பிரிவு பகுதியில் பிரச்சனை இருப்பதால் அறுவை சிகிச்சை மூலம் தான் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளார். அவரின் மகன் அறுவை சிகிச்சைக்காக ரூ7000/= இத்தொகை கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் மூலம்  வழுங்கப்பட்டது.

11 December 2012

வழிப்போக்கர்கு உதவி

வடகரையை சேர்ந்த சகோதரர் சாஹீல் ஹமீது என்பவரின் குடும்பத்தோடு கூத்தாநல்லூர் வேலை தேடி வந்தாகவும்  தனது ஊருக்கு பஸ் செல்லுவதற்க்கு  தொகையில்லமால் இருந்தார் அதனை விசாரித்து அவருக்கு வழி செலவிற்க்கு ரூ 600.00. கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத்மூலம் வழுங்கப்பட்டது.

யார் இவர் நோட்டீஸ் வினியோகம்

யார் இவர் என்ற நோட்டிஸ் மாற்று மாத சகோதரர்களுக்கு பலருக்கு வினியோகம் செய்யப்பட்டது அதில் செந்தில் என்பவருக்கு கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் துனை செயலாளர் ஆர்.நசீர் அவர்கள்கொடுத்து  அதில் உள்ள விஷயங்களை பற்றி தாவா செய்தார்.

27 October 2012

ரசூல் (ஸல்) மறைவான ஞானம் உண்டு என்ற நோட்டீஸுக்கு KNR TNTJ மறுப்பு நோட்டீஸ்

அஸ்ஸலாமு அலைக்கும்
சில நாட்களுக்கு முன் 10 நபர்களாள் ரசூல் ஸல் அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்ற நோட்டீஸ் வெள்ளிக்கிழமை எல்லா பள்ளிவாசல்களிலும் பரவலாக விநியோகம் செய்யப்பட்டது, இந்த ஷிர்க்கான வாதத்திற்கு பதில் குடுக்கும்விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு மறுப்பு நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது - அவர்களது வெளியீட்டையும் நமது பதிலடியையும் இதோடு இனைத்திருக்கிறோம்.










கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத்-ஹஜ் பெருநாள் 2012‏

அன்பார்ந்த தாங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பெருநாள் தொழுகை சிறப்பாக  நடைபெற்றது இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.                                                                                                                                                                     
                                                                                                                                                                                                                                                                                                                    










 


03 October 2012

கூட்டு குர்பானி-2012

கூட்டு குர்பானி-2012 

அன்பார்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனா
ல் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! அல் குரான் 22:37 

கடந்த ஆண்டு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கூட்டு குர்பானியின் மூலம் சுமார் 250 ஏழை எளிய குடும்பத்திற்கு குர்பானி இறச்சியை நமது ஜமாத் சகோதரர்கள் ஏழை எளியவர்கள் வீட்டிற்க்கு சென்று நேரடியாக ஆட்டோ மூலம் வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.. குர்பானி தோல் மூலம் கிடைத்த தொகையினை கொண்டு கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்யப்பட்டது. 

இன்ஷாஅல்லாஹ் கடந்த ஆண்டு போல் இவ்வாண்டும் கூட்டு குர்பானிக்கான 7 நபர் கொண்ட மாட்டிறைச்சி பங்கு ஓன்றுக்கு ரூ 1600/= என விலைவாசிக்கு ஏற்ப நிர்ணயம் செய்து உள்ளோம், குர்பானி கொடுக்க விரும்புவர்கள் பங்குக்கான தொகையை அனுப்பி தருமாறு கேட்டு கொள்கிறோம். மற்றும் சகோதரர்களுக்கு தகவலை தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

தொடர்புக்கு: 965 973 9559, 9943742778,

நிர்வாகம்
கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ்
தலைவர்

17 September 2012

அமெரிக்கா அரசை கண்டித்து கூத்தாநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்ப்பாட்டம்.அல்லாஹீ அக்பர்

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து ஒலி முஹம்மது அவர்கள் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள் முற்றுகைப் போராட்டத்தை கூத்தாநல்லூர் கிளைதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பச்சிளம் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயாரித்தவனையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள  யும் கண்டித்து  கோசங்களை எழுப்பினர்.பெண்கள் உடன் வந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.