அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

31 January 2013

31/01/2013 விஸ்வரூபம் தடை கோரி மனு

விஸ்வரூபம்  திரைப்படம் தடை செய்ய கோரி மனு
தேதி - 31/01/2013
இன்று 31/01/2013 வியாழன் காலை சுமார் 11.20 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் விஸ்வரூபம் திரைப்படத்தை நிரந்திர தடை செய்ய கோரி மனு கொடுக்கப்பட்டது கூத்தாநல்லூர் கிளை சார்பாக நிர்வாகிகளும் இதில் கலந்துகொன்டனர், திருவாரூர் மாவட்ட நிர்வகளுடன் இம்மனு மாவட்ட ஆட்சியாளரிடம் அளிக்கப்பட்டது.






30 January 2013

29 January 2013

பாரதிராஜாவைக் கொச்சைப்படுத்தலாமா?- சகோ. பி.ஜே வின் விளக்கம்

பாரதிராஜாவைக் கொச்சைப்படுத்தலாமா

பாரதிராஜாவின் குடும்பப் பெண்களை இழுத்து பீஜே பேசியது சரியா? என்று பரவலாகப் பேசப்படுகிறது. அவ்வாறு பீஜே பேசியது சரியா?

அஸ்மா சரஃபுத்தீன், பிரான்ஸ்

அந்த உரையில் நான் என்ன பேசினேன் எதற்காகப் பேசினேன்? இதைச் சரியாகக் கவனித்தால் என் பேச்சில் குற்றம் கூற மாட்டார்கள்.

நான் பேசியது பாரதிராஜா பேசியதற்கு பதிலடியாகத் தான். எனவே பாரதிராஜா பேசியது என்ன என்பதைச் சரியாக விளங்கிக் கொண்டால் தான் நான் என்ன பதிலடி கொடுத்தேன் என்பதையும் விளங்க முடியும்.

விஸ்வரூபம் பட்த்தை தடை செய்ய வேண்டாம் என்று அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தால் அதற்கு மட்டும் நாம் பதிலளிக்கலாம்.

அல்லது முஸ்லிம் தலைவர்களே இதில் கொஞ்சம் விட்டுக் கொடுங்கள் என்று கூறினால் அதற்கு உரிய விளக்கத்தை நாம் கொடுக்க முடியும்.

ஆனால் அனைத்து முஸ்லிம் சமுதாய இயக்கங்களின் நடவடிக்கை பற்றி கருத்து சொல்லும் போது எவ்வளவு பொறுப்புடன் அவர் கருத்து சொல்ல வேண்டும்?

விஸ்வரூபம் படம் தீவிரவாதத்தை எதிர்க்கிறதாம். அந்தப் படத்தை எதிர்ப்பதன் மூலம் உங்களை தீவிரவாதிகளாக அடையாளம் காட்டி விடாதீர்கள் என்று அவர் கூறுகிறார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழியையும் இங்கே சொல்கிறார். இதுவரை நீங்கள் தீவிரவாதிகள் என்பது உலகத்துக்குத் தெரியாமல் இருந்தது. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லி அப்பனைக் காட்டிக் கொடுத்த மகன் போல் இப்படத்தை எதிர்த்து நீங்கள் தீவிரவாதிகள் என்பதைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என்பது தான் இதன் கருத்து.

இப்படத்தை எதிர்க்கும் எல்லா முஸ்லிம் தலவர்களும் தீவிரவாதிகள் என்று சொன்னாரே இந்தக் கொடூரமான சொல் என்ன விளைவை ஏற்படுத்தும்? இந்து மக்கள் மத்தியிலும் மற்ற மக்கள் மத்தியிலும் இது எவ்வளவு மோசமான விளைவை ஏற்படுத்தும்? எல்லா முஸ்லிம்களும் தீவிரவதிகள் தானா? இவ்வளவு நாட்களாக நடித்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்களா? என்று மற்றவர்கள் எண்ணினால் அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்? இது குறித்து எழுத்தாளர் யாரும் வாய் திறந்து பாரதிராஜவை இதுவரைக் கண்டிக்கவில்லை.

நான் பதிலடி கொடுத்ததற்காக எனக்கு எதிராக பேனா பிடிக்கும் நண்பர்கள் இது எவ்வளவு கொடூரமான விஷக் கருத்து என்று ஏன் பாரதிராஜவைக் கண்டிக்கவில்லை?

பொதுவாக இஸ்லாத்திலும் இன்ன பிற சட்டங்களிலும் கிராமப்பஞ்சாயத்துகளிலும் ஆரம்பித்து வைத்தவனுக்கு எதிராக மற்றவன் பேசுவதைக் குற்றமாக தீர்ப்பளிக்க மாட்டார்கள். இதுதான் உலக நியதி. ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித்து ஒழுகும் மரபு.

பாரதிராஜா சுமத்திய குற்றச்சாட்டில் நானும் அடக்கம்.

என் சமுதாயத்தில் உள்ளவர்கள் யாரும் தீவிரவாதத்தில் ஈடுபடக் கூடாது என்று பல வருடங்களாக நான் பிரச்சாரம் செய்து தீவிர எண்ணம் கொண்ட சிலரின் அச்சுறுத்தல் காரணமாக எனக்கு அரசுப் பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு பாடுபட்டு வருகிறேன். இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை எனவும் ஆதாரங்களுடன் விளக்கி வருகிறேன். ஒரு திரைப்படத்தை நான் எதிர்ப்பது என்னையும் தீவிரவாதி பட்டியலில் சேர்த்து விடும் என்றால் அதனால் நானும் பாதிக்கப்படுகிறேன்.

நமது மார்க்கத்துக்காகவும் உரிமைக்காகவும் பேசினால் நமக்கும் தீவிரவாதி பட்டம் கிடைக்குமோ என்ற அச்சுறுத்தலாகவே இதை நான் பார்க்கிறேன்.

பாரதிராஜா வைத்த லாஜிக் தப்பானது. பொருளற்றது என்பதை அவருக்கும் அவரது கருத்தில் உடன்படுவோருக்கும் நான் விளக்குவதற்காக அதே லாஜிக்கில் பதில் சொன்னேன்.

தீவிரவாதிகளை எதிர்ப்பதாகச் சொல்லப்படும் படத்தை எதிர்த்தால் அவன் தீவிரவாதி தான் என்ற லாஜிக் பிரகாரம்

விபச்சாரம் செய்யும் நடிகைகள் பற்றி எழுதியதற்காக தினமலர் அலுவலகத்தை தாக்கினீர்களே? அந்தப் பத்திரிகையைக் கொளுத்தினீர்களே? அதன் செய்தி ஆசிரியர் லெனினைக் கைது செய்ய வைத்தீர்களே? விபச்சாரம் செய்த நடிகையைப் பற்றி எழுதும் போது அதை நீங்கள் எதிர்த்தால் நீங்களும் உங்கள் குடும்பப் பெண்களும் அந்தத் தொழில் செய்கிறார்கள் என்று நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா?

இந்தக் கேள்வி பாரதிராஜாவின் லாஜிக் தவறு என்று உணர்த்துவதற்குத்தான். அவரது குடும்ப்ப் பெண்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு அல்ல. அப்படி எடுத்துக் கொள்ளலாமா என்ற வாசகம் அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற அர்த்த்தில் தான் கையாளப்படும்.

இந்த லாஜிக்கை பாரதிராஜா பல சமயங்களில் மீறி இருந்தால் அவற்றில் ஒன்றை நான் உதாரணமாக நான் சொல்லி இருப்பேன். அவர் விபச்சாரம் செய்த நடிகைகள் பற்றிய செய்தியின் போது லாஜிக்கை மீறியுள்ளது தான் என் நினைவுக்கு வருகிறது. எனவே தான் அதைக் குறிப்பிட்டுள்ளேன்.

மேலும் பொதுவாக இது போல் ஆரம்பித்து வைப்பது தான் குற்றமாகும். தூண்டப்பட்டு கூடுதல் குறைவாகச் சொல்வது மனிதனின் இயல்பாக உள்ளது.

அநீதி இழைக்கப்பட்டவன் தவிர மற்றவன் தீய சொல்லைப் பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான் – திருக்குர்ஆன் 4:148

அவர்கள் வரம்பு மீறினால் அது போல் நீங்களும் வரம்பு மீறலாம். திருக்குர்ஆன் 2:194

இஸ்லாம் மட்டும் இதைக் கூறவில்லை. மானமுள்ள எந்த மனிதனின் இயல்பும் இதுதான்.

ஒரு படத்தை எதிர்ப்பதால் - குர்ஆனைக் கேவலப்படுத்துகிறது என்பதற்காக எதிர்ப்பதால் - முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றால் இந்த விமர்சனம் ஏற்படுத்தும் விளைவுகள் கடுமயானவை.

இவனுக எல்லோருமே தீவிரவாதிகள் தான். நம்மை நடித்து ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் உருவனால் அது எங்கள் உயிருக்கும் உடமைக்கும் மானத்துக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாங்கள் எந்த அளவு பாதிக்கப்படுவோம்?

தொடர்ந்து இதே வேலையாக அலைகிறார்கள். சரியான முறையில் பதில் சொல்லாமல் அமைதி காப்பதை அனுமதியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்ற நிலையில் தான் அந்த உதாரணம் காட்டப்பட்டது.

அதுவும் எழுதி வைத்து நான் வாசிக்கவில்லை. மேடைப்பேச்சில் வந்து விழுந்த சொற்கள். ஆனால் பாரதிராஜா எழுதிவைத்துக் கொண்டு அந்த வாசகங்களை வாசிக்கிறாரே? நின்று நிதானமாக அவர் இதைச் சொன்னார்? வாய் தவறி அவர் இப்படி சொல்லவில்லை. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் பாரதிராஜாவின் குடும்பத்தின் மீது குற்றம் சாட்டவில்லை. உங்கள் வாதப்பட்டி இப்படி அர்த்தம் வந்து விடும் என்றுதான் சொன்னேன்.

நானோ என் சமுதாயமோ பாதிக்கப்படாத நிலையில் அந்த உதாரணம் காட்டி இருந்தால் அது மிகப் பெரும் தவறு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.பாதிக்கப்பட்ட போது பதிலடி கொடுப்பதை இதற்குச் சமமாக ஆக்க முடியாது.

பாரதிராஜா முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகள் என்ற கருத்தில் நான் சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொன்னால் நான் எடுத்துக் காட்டிய உதாரணத்துக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயார்.

அன்புடன்

பீஜைனுல் ஆபிதீன்

ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தருவேன் இன்ஷா அல்லாஹ்

28 January 2013

27/01/13 அன்று நடந்த விஷ்வரூபத்திற்கு எதிராக பிஜே பேசிய வீடியோ

கடந்த 27/01/2013 அன்று மண்ணடியில் விஸ்வரூபத்திற்கு எதிரான பொதுக்கூட்டத்தில் பிஜே அவர்கள் உரையாற்றிய வீடியோ



ஜஷாக்கல்லாஹூ கைரன் சகோ. அஜ்மல் இந்த சகோதரர் தான் இந்த தளத்தில் அப்லோடு செய்தார், சில வீடியோ தளத்தில் இந்த உரை அப்லோடு செய்யப்பட்டு நீக்கப்பட்டு இருக்கிறது என்று சகோதரர்கள் தெரிவித்ததால் youtube தளத்தில் அப்லோடு செய்ததை இங்கு பதிவிடுகிறோம்.

27/01/13 அன்று நடந்த மாணவர்களுக்கான தர்பியா

மாணவர்களுக்கான தர்பியா
தேதி 27-1-2013
கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் அரசு விடுமுறையை மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 27/01/2013 அன்று மாணவர்களுக்கான தொழுகை பற்றி பயான் நடத்தி அதை பற்றிய செய்முறை பயிற்சியும் இமாம் எஸ். காதர் அவர்களால் சொல்லிக்கொடுக்கப்பட்டது, இந்த பயானையும் தொழுகைக்கான பயிற்சியையும் விளக்கம் பெற்று மாணவர்கள் பயன்பெற்றனர்.மாணவர்களுக்கு தொழுகைக்கான விளக்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது இது போன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடந்துவர துஆ செய்யவும்.
நிகழ்ச்சியின் புகைப்படம் இனைக்கப்பட்டுள்ளது.


26 January 2013

விஸ்வரூபம் தடை நீங்கினாலும் தியேட்டரில் ஓட்ட முடியாது

விஸ்வரூபம் தடை நீங்கினாலும் தியேட்டரில் ஓட்ட முடியாது - நாட்டிலுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் விஸ்வரூபம் எடுப்பார்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை...........!! 

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில தலைவர் பிஜே அவர்கள் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி.

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை நீக்கம் செய்யப்பட்டாலும் அதை திரையரங்குகளில் ஓடவிடமாட்டோம் 

ஒருவேளை விஸ்வரூபம் தடையை மீறி படம் வெளியானால் அதை தடுக்கும் பணியில் ஈடுபடுவோம் எனவும், இஸ்லாமியர்களை மிக மோசமாக விமர்சனம் செய்துள்ள இந்த படத்தை பார்த்து உறுதி செய்த பிறகு தான் இந்த முடிவு எடுக்கப் பட்டது என்று விளக்கமளித்தார்.

தொலைகாட்சி பேட்டியின் வீடியோ லிங்க்





இஸ்லாமிய சட்டமே தீர்வு! மாபெரும் பொதுக்கூட்டம் - 27/01/2013

இஸ்லாமிய சட்டமே தீர்வு! மாபெரும் பொதுக்கூட்டம்............!!

ரிசானா விகாரத்தில் கருத்து சொன்ன கலைஞர், நக்கீரன், ஆனந்தவிகடன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரின் வரட்டு வாதங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் மற்றும் விஸ்வரூபம் திரைப்படம் அடுத்த கட்டம் என்ன என்பதை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் 
 உரை :- பி.ஜைனுல் ஆபீதின், கோவை.ரஹ்மத்துல்லாஹ் 

நேரம் : 27.01.13 - இரவு 7மணி (இன்ஷா அல்லாஹ்)
இடம் : மண்ணடி தம்புச் செட்டித்தெரு, சென்னை

முஸ்லிம் சமுதாயத்தை கலாச்சார தீவிரவாதி என்று கொக்கரித்த ஆபாச தீவிரவாதிக்கு மரண அடி கொடுக்க உணர்வுள்ள சமுதாயமே அலை அலையாய் ஆர்ப்பரித்து வாரீர்......

அழைக்கிறது : 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


நேரடி ஒளிபரப்பு www.onlinepj.com  இனையத்தில்


சவுதியில் நடந்த ரிஸான மரன தண்டனை எதிர்த்தவர்களுக்கு விவாத அறைகூவல்-24/01/13

அறைக்கூவல் விடுகிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்-சுவரொட்டி   
தேதி - 24-1-2013 

கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத்தின் “” நீங்கள் சொல்வதில் உண்மையாளர்களாக இருந்தால் பகீரங்க விவாதம் செய்ய தயரா??கூத்தாநல்லூர் நகர முழுவதும் சுவரொட்டி ஓட்டப்பட்டது.

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா - 23/01/2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக நமதூரில் ரபியுல் அவ்வல் மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத பித்அத்தாக நடக்கும் மீலாது விழாவை புறக்கனிக்குமாறும் அதற்கும் இஸ்லாத்திறக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆனித்தரமாகவும் ஆதாரப்பூர்வமாகும் விளக்கி 4 பக்கத்தில் நோட்டீஸாக நமதூரில் உள்ள அனைத்து வீட்டிற்கும் அதாவது 1000நோட்டீஸ்அச்சு செய்து  வினியோகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்




23/01/2013 அன்று நடந்த மாற்று மத தாவா

மாற்றுமத தாவா
தேதி -23-1-2013
கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ***மாமனிதர் நபிகள் நாயகம்*** என்ற புத்தகத்தை மாற்றுமத  சகோதரர் பாஸ்கர் மற்றும் பல சகோதரர்களுக்கு நேரடியாக சென்று இப்புத்தகத்தை கொடுக்கப்பட்டது.புகழ் அனைத்து அல்லாவிற்க்கே…..

21/01/2013 அன்று கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் இஸ்லாத்தை ஏற்ற டி. அன்பழகன்

கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் இஸ்லாத்தை ஏற்ற டி. அன்பழகன்.
தேதி - 21/01/13
கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் இன்று 21/01/2013 காலை 11.00 மனிக்கு டி.அன்பழகன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தார் அவருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தனிக்கை குழு உறுப்பினர் சகோ. தஃவ்பீக் மற்றும் நமது கிளை நிர்வாகிகள் தூய இஸ்லாத்தை பற்றி அவருக்கு விளக்கம் கொடுத்து அவருக்கு அப்துல்லாஹ் என்று பெயர் வைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். மேலும் இச்சகோதரருக்கு குர்ஆன் மொழிபெயர்ப்பும் மற்றும் தொழுகை சம்பந்தமான புத்தகம் வழங்கப்பட்டது.
அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்
(அல்குர்ஆன் 110 : 1,2,3)

20/01/2013 அன்று புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது‏

20/01/2013
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் 20/01/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த பொதுக்குழுவில் அல்லாஹ்வின் பேரருளாள் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது,
புதிய நிர்வாகிகள்
தலைவர்
:
K.A. அப்துல் நசீர்  (9750276003)
துனை தலைவர்
:
A. நைனா முகமது (9965275764)
செயலாளர்
:
S.A. பைசல் கான் (7502816980)
துனை செயலாளர் 1
:
S.H. நூர் முஹம்மது(ஆரீப்)(9942212280)
துனை செயலாளர் 2
:
S.M.A. அக்பர் அலி (8508150172)
பொருளாளர்
:
S.S. இஸ்மத் பாட்சா (9943742778)
செயற்குழு உறுப்பினர்கள்
1-      M. முஹம்மது அலி (9659739599)
2-      A. சாஹீல் ஹமீது  (9865356480)
3-      V.M.முஹம்மது காசிம் (9566234766)
4-      த.ப. செய்யது அஹமது (9865558632)
செயற்குழு உறுப்பினர்களை தேவைப்பட்டால் அதிகமாக்க மாவட்ட நிர்வாகம் கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத்துக்கு அதிகாரம் அளித்துள்ளது.
மாணவரனி ஒருங்கினைப்பு குழு
1-      I.ரஹ்மத்துல்லாஹ் (9842626261)
2-      T.S.A.இத்ரீஸ் (9942826871)
3-      A.A. முஹம்மது சர்புதீன் (9894188568)
இந்த நிர்வாகம் சிறப்பாக இயங்க அல்லாஹ்விடம் துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கூத்தாநல்லூர்