கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் இஸ்லாத்தை ஏற்ற டி. அன்பழகன்.
தேதி - 21/01/13
கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸில் இன்று 21/01/2013 காலை 11.00 மனிக்கு டி.அன்பழகன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தார் அவருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தனிக்கை குழு உறுப்பினர் சகோ. தஃவ்பீக் மற்றும் நமது கிளை நிர்வாகிகள் தூய இஸ்லாத்தை பற்றி அவருக்கு விளக்கம் கொடுத்து அவருக்கு அப்துல்லாஹ் என்று பெயர் வைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். மேலும் இச்சகோதரருக்கு குர்ஆன் மொழிபெயர்ப்பும் மற்றும் தொழுகை சம்பந்தமான புத்தகம் வழங்கப்பட்டது.
“அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்”
(அல்குர்ஆன் 110 : 1,2,3)
No comments:
Post a Comment